IBM-ல் fresherஆக எடுக்கப்பட்டவர்கள் லே-ஆஃப் துவங்கி விட்டது!!
Posted by newscap on January 24, 2008
IBM முதலான பன்னாட்டு கம்பேனிகள் இந்தியா முதலான மூன்றாம் உலக நாடுகளில் தொழில் துவங்குவதற்க்கு profit center/Cost center என்ற முறையை பயன்படுத்தி வருகின்றன. அதாவது IBM இந்தியா கம்பேனி என்பது Pvt Ltd ஆக தனி கம்பேனியாக இருக்கும். அது IBM USAவிடமிருந்து புரோஜெக்ட்களை அவுட்சோர்சிங் முறையில் பெருகிறது. அதாவது இந்தியன் IBMன் லாஜிக்கல் கிளையண்ட் IBM USA. இதன் அர்த்தம் என்னவென்றால் இந்தியாவில் இனிமேல் சுரண்டி பெரிதாக எதுவும் தேறாது என்ற நிலை வந்தால் வேறு ஏதாவது நாட்டு IBMக்கு (IBM pakistan Pvt ltd, IBM சிரிலங்கா என்பது போல) தனது பிசினஸை மாற்றிக் கொள்ளுவது வசதி. IBM US அதாவது கார்ப்போரேட் தலைமை லாபம் பெறுவது மட்டும் பாதிக்கவே பாதிக்காது.
தற்போது தனது லாபத்தை உறுதிப்படுத்தும் முகமாக காஸ்ட் கட்டிங் அதாவது செலவீனங்களை குறைக்கும் முயற்சியில் இந்த நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக கடந்த வருட(2007) மத்தியில் தனது கம்பேனியில் வேலை பார்த்த ஒப்பந்த ஊழியர்களை வெளியே அனுப்பியது IBM. அவர்களுக்காவது இரண்டு மூன்று மாதம் நேரம் கொடுத்தது. ஆனால் தற்போது வேலை நீக்கம் செய்யப்படும் Freshersகளை ஒரே நாளில் எழுதி வாங்கிக் கொண்டு வேலை நீக்கம் செய்து வருகிறது IBM.
1990க்குப் பிறகு இந்தியா திறந்து விடப் பட்ட பிறகிலிருந்து இது வரை IT/ITES வேலைகள் 16 லட்சம் மட்டுமே உருவாகியுள்ளது. இதே நேரத்தில் சிறு தொழில் துறை என்பது தனது சொந்த காலில் நின்ற நிலைமை போய் பன்னாட்டு தரகு கம்பேனிகளின் ஒப்பந்தக்கார பட்டறைகளாக இன்று உருமாறியுள்ளன இதனால் வேலை இழப்பு 12 லட்சம். இதே நேரத்தில் ஒவ்வொரு வருடமும் கல்லூரிகளின் இருந்து வெளி வரும் பொறியியல் பட்டாதாரிகள் மட்டும் லட்சக்கணக்கில். இந்த லட்சணத்தில் இந்த பன்னாட்டு தரகு கம்பேனிகளுக்கு 100% வருமான வரிச் சலுகை. இதில் Lay off வேறு.
இதே IBM முதலான கம்பேனிகள் தமது அமெரிக்காவில் தமது கம்பேனியில் வேலை பார்த்தவர்களை கருவேப்பிலை போல வீசிவிட்டு வந்தன என்பதையும், அவர்களுக்கே அதுதான் என்றால் இந்திய ஊழியர்கள் எம்மாத்திரம் என்பதையும் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். இப்படி கேட்க்க நாதியற்ற அனாதை போல IT கம்பேனியில் வேலை பார்ப்பது ஆக அநாகரிகமானது, அவமானகரமானது.
செய்தி ஆதாரம்: இணைய நண்பர்கள்.
செய்திரசம்
Freshers – கல்லூரி முடிந்தவுடன் கம்பேனிகளில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள்.
Related Article:
Leave a Reply