Not Just News

Not just another Newsletter

பயங்கரவாதிகளை கரெக்டா கண்டுபிடிச்ச பாஜக – இந்தியா ஒ(ழி)ளிர்ந்தது!!

Posted by newscap on June 16, 2008

இந்தியாவை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பற்ற வேண்டுமா, பாஜகவுக்கு ஓட்டு போடுங்கள். இப்படி சொல்லித்தான் ஊரெல்லாம் ஓட்டு பொறுக்கி வருகிறது பாசக. உண்மையில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது பாசகவினால்தான் வளர்கிறது என்கிற் அம்சம் ஒரு பக்கம் இருக்க. உண்மையிலேயே பயங்கரவாதம் என்பது மக்களை பய பீதிக்கு ஆளாக்கி படு கொலை செய்வதுதான் என்றால் அப்படிப்பட்ட மிகக் கொடூரமான பயங்கரவாதம் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற பெயரில் நாட்டை கூட்டிக் கொடுத்து விவசாயிகளை லட்சக்கணக்கில் தற்கொலை செய்ய வைக்கும் மறுகாலனியாதிக்க கொள்கையும், அதை நடைமுறைப்படுத்தும், அதை வைத்து நக்கிப் பிழைக்கும் தரகு பார்ப்பனிய முதலாளிகளும், அதிகார வர்க்கமும்தான் மிகக் கொடூரமான பயங்கரவாதிகள்.

இந்த விசயத்தைத்தான் பார்ப்பன பயங்கரவாதிகளிடம் நாம் எப்போதுமே முன் வைத்து பேசுவோம். நீதான் பெரிய புடுங்கி ஆச்சே, பயங்கரவாதிகளை அடிச்சு துவம்சம் செய்றதுல பெரிய மயிராண்டி அப்படின்னு சொல்லிக்கிற இல்லையா…. அப்படின்னா இந்த பொருளாதார பயங்கரவாதிகளுக்கு எதிரா ஏதாவது செய்யேண்டா என்பதுதான் நாம் எப்போதுமே அவர்கள் முன் வைக்கும் வாதம். இதற்க்கு அவர்கள் பதில் சொன்னதில்லை. பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடி ஒளிவதை தவிர்த்து வேறொன்றும் செய்ததில்லை.

இப்படி இருக்கும் போது, பாசக கட்சி இந்தியாவில் சாதரண சனங்களை பயங்கரவாத கொடுமையில் தள்ளும் ஒரு விசயத்தை போன வாரம் மிகச் சரியாக அடையாளம் கண்டு கண்டித்துள்ளது. அதனை எதிர்த்து பாசகவோ அல்லது அரை டவுசர் RSS கேப்மாறிகளோ போராடுவார்களா என்பதுதான் நமது கேள்வி. அவர்கள் அடையாளம் கண்டுபிடித்துள்ள பயங்கரவாதி வேறு யாருமல்ல அது விலைவாசி உயர்வுதான்.

“””common man terrorised: BJP “”

விலைவாசி உயர்வுக்கு பின்னே உள்ள காரணங்கள் வருமாறு, 1)உலகமய கொள்கைகளினால் நாசம் செய்யப்பட்ட விவசாயமும், விவசாயிகளின் தற்கொலைகள் அதனால் பெருத்த பின்னடைவை சந்தித்துள்ள உணவு தானியம் உள்ளிட்ட விவசாய உற்பத்தியும். 2) இருக்கின்ற நிலங்களையும் அமெரிக்க கார்களுக்கும், பணக்கார பன்னாடைகளும் உல்லாசமாக ஒருத்தன் ரெண்டு பேர் பிராயணம் செய்யும் சொகுசு கார்களுக்கும் தேவையான பயோ டீசல் தாயாரிக்க தேவையான பயிர்களை விளைவிக்கும் நிலங்களாக மாற்றப்பட்டது – அதாவது உணவு தானிய உற்பத்தி பயோ டீசல் தானிய உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டது, 3) மிச்ச சொச்ச உணவு பொருட்களும் பங்கு சந்தை யூக வணிக சூதாட்டத்திற்கு திறந்து விடப்பட்டதன் காரணமாக போலியாக விலைகள் பல மடங்கு ஊதிப் பெருக்க வைக்கப்பட்டன, 4) அமெரிக்காவின் பெட் ரோல் – அரசியல்/பொருளாதார வக்கிர விளையாட்டுக்கள் எண்ணெய் விலையேறுவதற்க்கு அடிப்படையாக இருப்பதும், அது பிற எல்லாப் பொருட்களின் விலையையும் ஏற்றிவிடுவதும்.

ஆக, பாசக, பயங்கரவாதிகளை எதிர்க்கும் கட்சி என்று சொல்வது உண்மையெனில் அதுவே சொல்வது போல விலைவாசி உயர்வுக்குக் காரணமான பன்னாட்டு தரகு கும்பல்களையும் அவர்களின் புரோக்கர் பன்னாடைகளையும் துவைத்து எடுக்க போராடுமா?

அது எப்படி?… பாசகவாவது போராடறதாவது. பங்கு சந்தை குப்புறடிக்க வுழுந்ததுக்கு காரணமான பயங்கரவாதிகளை துப்பியெறிந்து கண்டுபிடித்த பாசக. விலைவாசி உயர்வு பயங்கரவாதத்துக்கு காரணமானவர்கள் வெளிப்படையாக தெரிந்தும் அவர்கள் குறித்து எதுவும் பேசாது. தனது கையை வைத்தே தனது கண்களை குத்திக் கொள்ளும் தவறை பாசக செய்ததேயில்லை. இன்னும் சொன்னால் பாசகவின் அர்த்தத்தில் பயங்கரவாதிகள் என்ற லிஸ்டில் வரும் இஸ்லாமிய பயங்கரவாதிகளே பாசகவின் வளர்ச்சியைத்தான் தமது வளர்ச்சிக்கான அடிப்படையாகக் கொண்டுள்ளனர் எனும் போது தனக்கு புரோக்கர் பணம் கிடைக்க வகை செய்ய்ம் பன்னாட்டு தரகு கும்பல்களை இவர்கள் எதிர்க்கப் போவதில்லை/அம்பலப்படுத்தப் போவதில்லை.

உண்மையில் இவர்கள் போன முறை ஆட்சியிலிருந்த பொழுதுதான் அதிக முறை விலைவாசியும், பெட் ரோல் விலையும் உயர்த்தப்பட்டது. அன்றைக்கு இந்தியாவின் உடலெங்கும் இருந்த உலகமய சிரங்கும் புண்ணும் பொட்டலம் கட்டுகிற ரேஞ்சில் இருந்தது. இன்னைக்கு அது வெடித்து சிதறி சீழ் பீய்ச்சி அடிக்கிறது. புண்ணும், சிரங்கும் என்னவோ அதிகாமாத்தான் ஆகி இருக்கிறது, அதுக்கு மேல தடவுற புணுகு பேரத்தான் பாசக, காங்கிரஸு, CPM/CPI அப்படின்னு விதவிதமா மாத்திக்கிறானுங்க. போன முறை இவிங்க ஆட்சி செஞ்ச போதுதான் இந்தியா ஒழிஞ்சது… சீ… ஸாரி.. ஒளிர்ந்தது. காங்கிரஸ் கொழுத்திப் போட்ட மறுகாலனியாதிக்க நெருப்பு அது, பாசக ஆட்சியிலே ‘செக சோதியா சொலித்த’ இந்தியாவா அந்த நெருப்பு மாறி, அந்த சொலிப்பு முத்திப் போயி காங்கிரஸ் ஆட்சியில இப்போ சொக்கப் பானையா கொழுந்து விட்டு எரியுது.

இந்த நெருப்புல பீடித் துண்டு பத்த வைச்சிக்கத்தான் பாசக முதல் அத்தனை எதிர்க் கட்சிகளும் வக்கிர கூப்பாடு போடுகின்றன. இந்த நெருப்பு பீடித் துண்டுகளையல்ல அவற்றை பீடித்திருக்கும் கரங்களையும் எரிக்கும் வல்லமையுள்ளதாக மாற்றுவதுதான் இந்த உலகமய வக்கிரத்திற்க்கு தீர்வு. அப்படிப்பட்ட மாற்றங்களின் அச்சாரமாகத்தான் ஒளிரும் அவர்களின் இந்தியாவின் சில பகுதிகள் இருளடைந்து வருகின்றன.  இருட்டுக்குப் பின் கிழக்கில் சிவக்கும் என்பது உலக பொது நியதி. (அவர்களின்) இந்தியா ஒழிந்து கொண்டிருக்கிறது…..

செய்திரசம்

Related Article:

சிரிக்க, சிந்திக்க, செயல்பட சில கார்ட்டூன்கள்!!!

 

உலக மக்களின் எதிரி அமெரிக்காவும்மக்களின் உணவை திருடி கொழுக்கும் கார்ப்போரேட் வேளாண் கழகங்களும்!!

 

பங்கு சந்தைக்கு ஆப்படித்தது யார் என்று கண்டுபிடித்துவிட்டார்கள்பாசக துப்பியெறியும் படை!!!

 

To hope or not to hope…

 One tight slap!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s