டாடாவுக்காகவும், சலீம் குருப் என்ற பன்னாட்டு கம்பெனிக்காகவும் நந்திகிராம், சிங்கூரில் ஆளும் போலிக் கம்யூனிஸ்ட்களின் குண்டர் படை ’30க்கும் மேற்பட்ட மக்களை கொன்றும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும்’ தனது பாசிசத்தை வெளிப்படுத்தியது.
தஸ்லீமா நஸ்ரின் விவகாரத்தில் முஸ்லீம் மதவெறியர்களுக்கு பயந்து தனது மதச்சார்பின்மை என்ற கோவனத்தையும் அவிழ்த்து விட்டது.
இவ்வாறு நாட்டை மீண்டும் காலனியாக்குவதை செய்து கொண்டே விலைவாசி உயர்வு, 123, புஷ் விவகாரம் போன்றவற்றை கண்டித்து இவர்கள் மக்களை திசைதிருப்புவது தான் இந்த துரோகிகளின் செயல்பாடாக உள்ளது.
மேற்கு வங்கத்தின் ‘மின்வாரியத்தின் தற்காலிக ஊழியர்கள் மாற்று சங்கம் அமைத்து போராடியதை’ மக்கள் கூடும் இடத்தில் சிஐடியு குண்டர் படை சென்று தாக்கி ஒருவர் கொல்லப்பட்டும் பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.