Not Just News

Not just another Newsletter

Posts Tagged ‘தமிழ்’

SEZயை எதிர்த்த பார்வேர்ட் ப்ளாக் கட்சியினர் ஐந்து பேர் CPM அரசால் சுட்டு சாகடிக்கப்பட்டனர்

Posted by newscap on February 10, 2008

போலி கம்யுனிஸ்டு என்ற நிலையிலிருந்து பன்னாட்டு தரகு கம்பேனிகளுக்கு தமது மாநிலத்தை கூட்டிக் கொடுக்க வசதியாக மக்களை கேள்வி முறையின்றி ஒடுக்கும் பாசிஸ்டு நிலைக்கு பரிணமித்துவிட்ட கம்முனிஸ்டு பார்ட்டி ஆப்பு இந்தியா(மார்க்ஸிஸ்ட்) – CPM கட்சியினர் மேலும் ஒரு ஒடுக்குமுறையை போராடும் விவசாயிகள் மீது ஏவிவிட்டுள்ளனர்.

 நந்திகிராமில் போராடிய மக்கள் மீது CPM தனது கட்சி குண்டர் படையுடன் தாக்கி பலரை சாகடித்ததுடன் இல்லாமல் போன வருட இறுதியில் அந்த பகுதியில் போலிசு அடக்குமுறையை ஏவி போராடும் மக்களை முற்றிலும் முடக்கியது. ஒடுக்கிய கையோடு நந்திகிராமில் நிலங்கள் கையகப்படுத்தபாடது என்று ஒரு நாள் சொல்லுவது அடுத்த நாளே விருப்பமுள்ளவர்களிடம் கையகப்படுத்தபடும் என்று சொல்லுவது என்று மக்களை குழப்பி வருவதோடு இல்லாமல் CPM அரசின் பன்னாட்டு தரகு சேவையை வெளிப்படையாக விளம்பரப்படுத்தி வந்தனர்.

 இதனை தொடரந்து மேவா அரசில் பங்கு வகிக்கும் பார்வார்ட் ப்ளாக் கட்சியினர் தலைமையில் போன வாரம் செவ்வாய்க்கிழமை விவசாயிகள், மேவாவில் அனுமதிக்கப்பட்ட SEZ திட்டங்களை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் போலீசு துப்பாக்கி சுடு நடத்தியது. இதில் 5 பேர் பலியாயினர்.

செய்திரசம்

Posted in தமிழ் | Tagged: , , , , | 1 Comment »

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

Posted by newscap on February 4, 2008

Photobucket

Photobucket

நன்றி: தினமலர் தென்காசியில் RSS பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள் மக்களை பிளவுபடுத்தி எல்லா அயோக்கியத் தனங்களையும் செய்து வருவது அனைவரும் அறிந்த செய்திதான். சமீபத்தில் நில உரிமை பிரச்சினை என்ற தனிப்பட்ட பிரச்சினையை மத பிரச்சினையாக திசை திருப்பி கலவரம் செய்து சில உயிர்கள் சிவலோக பதவியடைய உதவி செய்தவர்களும் இந்த கும்பல்தான்.

இன்னிலையில் அந்த பகுதியில் தமது செல்வாக்கை மேலும் வளர்த்துக் கொள்ள ஏதுவாக RSS அலுவலகத்தில் தாங்களே குண்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியர் மீது பலி போடும் தனது பாரம்பரிய தந்திரத்தை இங்கும் செய்து அம்பலப்பட்டு போயுள்ளது RSS பார்ப்பன இந்துத்துவ வெறி கும்பல்.

இது போன்ற நடைமுறை இவர்களுக்கு புதிதானதொன்றும் இல்லை. ஏற்கனவே நாண்டடில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து அம்பலப்பட்டு போனவர்கள்தான் இவர்கள். அந்த சம்பவத்தில் இறந்தவன் தவிர்த்து மாட்டிக் கொண்ட வெறியர்கள் முஸ்லீம் மசுதி குண்டு வெடிப்புகள், நாக்பூர் RSS அலுவலக குண்டு வெடிப்புகளில் தொடர்பு கொண்டிருந்தது வெளிவந்தது.

இதே கும்பல் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்து பயிற்சி செய்வதும் இவற்றை தமது ஊர்வலங்களில் உபயோகப்படுத்துவதும் எல்லா பத்திரிகைகளிலும் வந்து அம்பலமானதுதான். குஜராத்தில் ராக்கேட் லாஞ்சர்கள் உபயோகித்தது குறித்து பாஜக கட்சி MLA வே வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

காந்தியை கொன்ற கோட்சே தனது கொள்கையை வெளிப்படையாக அறிவிக்கும் நேர்மையின்றி கோழைத்தனமாக, ஒரு பன்றியைப் போல முஸ்லீமின் பெயரை தனது கையில் பச்சை குத்திக் கொண்டு இந்திய முஸ்லீம்களை கொன்றொழிக்க நினைத்தவனின் வாரிசுகள் வெறு விதமாக செயல்பட்டிருந்தால்தான் ஆச்சரியம்.

Photobucket

Photobucket

Photobucket

 குண்டு வைத்தவனின் வாக்குமூலம்:

இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவு கூடும் என்பதால் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் சஞ்சீவ் குமார்.” 

குண்டு வெடித்தவுடன் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைது செய் என்று ஏற்கனவே திட்டமிட்டபடி இந்துத்துவ வெறியுடன் பேசிய RSS குரங்கு படையின் தலைவன்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வழக்கம் போல் அரசு செயல்பட்டு வருவதால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெளிப்படையாக வன்முறை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.

தொடர்ந்து ஹிந்துக்கள் மீதும், ஹிந்து இயக்கத் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தென்காசியில் கடந்த வருடம் ஹிந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியன் அவரது வீட்டு முன்பே படுகொலை செய்யப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து அவரது சகோதரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசித் தாக்கியுள்ளனர். இவைகள் அனைத்திற்கும் ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால் தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தைரியமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் மீது தாக்குதல் தடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமிய பயங்கர வாதிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்திடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இவன் கணக்குபடியே குண்டு வைச்சவனை கைது செஞ்சாச்சி. ஆனா இந்த கும்பல் இப்போ கைது செஞ்சது தப்புன்னு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

செய்திரசம்

Related Articles:

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …

பில்கிஸ் தீர்ப்பு – சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…

Posted in தமிழ் | Tagged: , , , , | 3 Comments »

19% இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!!

Posted by newscap on February 4, 2008

நன்றி: thatstamil

டெல்லி: பெரும் எண்ணிக்கையிலான நகர் பகுதி இந்தியர்கள் ஒரு நாளைக்கு வெறும் 19 ரூபாயில் தான் வாழ்க்கையை ஒட்டுகின்றனர் என தேசிய அளவிலான ஆய்வு தெரிவிக்கிறது. நகர்ப் பகுதிகளில் இது 12 ரூபாயாக உள்ளது.

கிராமப் பகுதிகளில் 19 சதவீத மக்கள் உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் ஒரு நாளைக்கு வெறும் ரூ. 12 மட்டுமே செலவிடும் பொருளாதார நிலையில் உள்ளனர். நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 22 சதவீதம் பேர் ரூ. 19 மட்டுமே செலவிடும் நிலையில் உள்ளனர்.

தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் (National Sample Survey Organisation) 2005-06ம் ஆண்டு நடத்திய ஆய்வு இந்த விவரங்களைத் தெரிவிக்கிறது.

கிராமப் பகுதிகளில் சராசரி இந்தியர்கள் செலவிடும் ஒவ்வொரு ரூபாயிலும் 53 பைசா உணவுக்கே செல்கிறது. நகர் பகுதிகளில் இது 40 பைசாவாக உள்ளது.

ஒரு பக்கம் பங்குச் சந்தையில் குறியீட்டு எண் பாய்கிறது, சரிகிறது. இன்னொரு பக்கம் இந்தியா 9 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது என்று மத்திய அரசு கோஷம் போடுகிறது. ஆனால், நாட்டில் கிட்டத்தட்ட கால்வாசி மக்கள் ‘அரை டாலர்’ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா ஒளிர்கிறது கோஷம் எங்கேயோ மங்கலாகக் கேட்கிறது..

நன்றி: thatstamil

செய்தி விமர்சனம்

Posted in தமிழ் | Tagged: , , , | 2 Comments »

சூளைமேட்டில் மக்களை சுட்டுக் கொன்றவருக்கு டெல்லியில் பாராட்டு பத்திரம்!!!

Posted by newscap on February 4, 2008

நீதிமன்றத்தால் தேடப்படும் கொலைகாரனுடன் பிரதமர் முதல் அத்தனை அரசுத்துறை அதிகாரிகளூம் உட்கார்ந்து பேசி வரவேற்க முடியுமா? இந்திய நாடாளுமன்றம் முதல் அனைத்து துறைகளிலும் பொறுக்கிகளும், ஒன்னாம் நம்பர் கிரிம்னல்களுமே இருக்கும் போது அவர்கள் கொலைகார மொள்ளமாறிகளுடன் பேசாமல் இருந்தால்தானே ஆச்சர்யம். டக்ளஸ் தேவானந்தா என்ற கொலைகாரன் 2006-ல் இந்தியா வந்து பிரதமர் முதல் அத்தனை அரசு துறை அதிகாரிகளையும் சந்தித்து இலங்கை பிரச்சினைக்காக பேசிச் சென்றுள்ளான். இவன் அப்போது இன வெறி பிடித்த சிரிலங்கா அரசில் ஒரு அமைச்சன். இந்த விசயம் எப்போது வேண்டுமானாலும் பேசத் தகுதியானதுதான் ஆனால் செய்தி விமர்சன தளத்தில் பேச வேண்டிய தேவை ஏற்ப்பட்டது ஏன்?

இன்று காலை சென்னையில் ஒரு நண்பர் நடந்து சென்ற பொழுது இந்த டக்ளச அண்ணனை பாராட்டி, சிராட்டி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. பல பல வென்று நன்கு செலவு செய்து அடிக்கப்பட்டிருந்த இந்த சுவரொட்டியில் ஈழ-இந்திய நட்புறவு செழிக்க உழைக்கும் ட்களஸுக்கு நன்றி தெரிவித்து “ராசிவ்காந்தி நினைவெழுச்சி இயக்கம்” என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த நண்பர் இந்த செய்தியை உடனே இமெயில் அனுப்பி மேலதிக தகவல்களும் தந்துள்ளார்.

இந்த டக்ளஸ் ஒரு அரசியல் அனாதை என்பதிருக்க இந்த ஒட்டாண்டிக்கு ஆதரவளிப்பது இந்திய சிங்கள அரசுகளும், உளவு நிறுவனங்களும்தான். இவனது வரலாற்றை சுருக்கமாக பார்த்து விட்டு பிறகு இந்த வால்போஸ்டர் அரசியலை பார்க்கலாம்.

1986-ல் சென்னை சூளைமேட்டில் EPRLF காமெண்டராக இருந்தார். ஒரு இரவு நேர உபா பார்டியில் உச்சஸ்தாயியில் இவர்கள் போட்ட ஆட்டத்தை பொறுக்க மாட்டாமல் சூளைமேடு பொதுமக்கள் எதிர்த்துள்ளனர். உபாவில் இருந்த இந்த கிரிமினல் உடனே தன்னிடம் இருந்த AK47(உபயம்: இந்திய உளவு துறை RAW) துப்பாக்கியால் சுட்டதில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் கொல்லப்பட்டார். கைது செய்து சிறையில் வைக்கப்பட்டவர் தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கம்பி எண்ணிக் கொண்டிருந்தவர் பெயில் வந்தார். வந்தவரை இந்திய உளவுத் துறை RAW பாதுகாப்பாக லங்கா(போஸ்டரில் உள்ளபடி எனில் ஈழத்தில் :-)) இறக்கிவிட்டது.

அன்றிலிருந்து அவரது விசுவாசம் ஒரு நாயின் விசுவாசம் போல இன்றும் தொடருகிறது. இந்த துரோகி இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் ஒரு கிரிமினல் தேச விரோத குற்றவாளி எனும் போதும் அவன் ஒரு ஆட்காட்டி என்ற காரணத்தினால் இந்திய அரசு துறையின் உச்சபட்ச ஆட்களை சந்திக்க இயலுகிறது.

நிற்க, இப்பொழுது சுவரொட்டிக்கு வருவோம். சமீபத்தில் LTTE ஆதரவாக பேசுபவர்களுக்கு எதிரான ஒரு போக்கை அரசு மேற்கொள்வதற்க்கான வாய்ப்புகள் அதிகமுள்ள சூழலை கணக்கில் கொண்டே இந்த சுவரொட்டியை பார்க்க வேண்டியுள்ளது. இந்த சுவரொட்டி RAW உளவுத் துறை கும்பலால் ஒட்ட்ப்பட்டிருப்பதற்க்கான வாய்ப்புகளே அதிகமுள்ளது. ஏன் என்றூ கேட்க அரசு இயந்திரத்தை தவிர்த்து வேறு எங்கும் ஒரு சொறிநாய் கூட இல்லாத ஒருவனுக்கு கலர் கலராக பலபலவென சுவரொட்டி மிளிர்கிறது என்றால் அதன் பின்னணீயை நாம் இப்படித்தான் சந்தேகிக்க வேண்டியுள்ளது. RAWவுக்கு இதெல்லாம் ஒன்றும் புதிய விசயமில்லை. நக்சல்பாரி புரட்சியாளர்கள் குறித்த பய பீதியை கிளப்புவதற்க்காக இவர்களே சுவரொட்டிகளை கைகளால் (ஒரிஜினல் எபெக்ட்) எழுதி ML என்று ஏதாவது ஒரு அமைப்பின் பெயரில் ஒட்டி அதன் பேரில் தமது போலி என்கவுண்டர்களையும், கைதுகளையும் செய்வது சகஜமே.

இந்த வால்போஸ்டர் ஒட்டப்படுவதற்க்கு முன்பாக சிங்கள் இன வெறி அரசின் அல்லக்கை ஏஜெண்டு ‘தி ஹிந்து’ பத்திரிகை என். ராம் கலைஞரை சந்தித்து பேசியுள்ளது இங்கு ஒப்பிட்டு பரிசீலிக்கத்தக்கது.

நன்றி: இமெயில் சுந்தரம்

செய்தி விமர்சனம்

Related:

கொலைகார டக்ளஸ் தேவானந்தாவை இந்தியாவில் அனுமதிக்க கூடாது

India should not to make the mistake of riding on clay horses!

Posted in தமிழ் | Tagged: , , , , | Leave a Comment »

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

Posted by newscap on January 30, 2008

நன்றி லேமூரியன்

தாவது நாங்க ஒரு ஆள்தான் பார்ப்ப்னியத்த எதிர்க்குறோம், நாங்கதான் உண்மையான பார்ப்பன எதிர்ப்பாளர்கள் அப்படின்னெல்லாம் மார் தட்டிக் கொண்டு அலைஞ்சவங்க எல்லாம் இப்போ பார்ப்ப்னியம் மேலே ஏறி நின்னு அடிக்கும் போது எங்கியோ போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க. அது தனிக் கதை.

இப்போ விசயம் என்னன்னா, பார்ப்பனியத்தோட அடியாள் படை, ரவுடி, கழிசடை கும்பல் துப்பாக்கியோட மத்திய பிரதேசத்துல ஊர்வலம் போயிருக்கானுங்க. அது 30ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரசில் செய்தியா வந்திருக்கு. இதே RSS கும்பலோட அல்லக்கை அமைப்பான பஜ்ரங்தள் ஆளுங்க 2007 ஆரம்பத்தில் மஹாராஸ்டிர நாண்டட்டில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து மாட்டிக்கிட்டாங்க. அப்பொதான் RSS நாக்பூர் ஆபிசுக்கு குண்டு வைச்சது, வெறு சில மசூதிகளில் குண்டு வெச்சது எல்லாம் இவந்தான்னு தெரிஞ்சது. குண்டு வைச்சிட்டு பலிய முஸ்லீம் மேல போட வசதியா முஸ்லீம் குல்லா முதலான தயாரிப்புகளோட நாண்டட்டில் மாட்டிக்கிட்டாங்க.

இது தவிர்த்து சாஹா பயிற்சி முகாம்களில் துப்பாக்கி பயிற்சி எடுப்பது குறித்து பத்திரிக்கைகளில் படங்களுடன் செய்திகள் வந்தது. இதற்க்கெல்லாம் சிகரம் வைச்ச மாதிரி, குஜராத கலவரத்தில் ராக்கெட் லாஞ்சர் டைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தியதாக தெஹல்கா விடியோவில் பேசினான் ஒரு எம்.எல்.ஏ. இப்போ போதாக்குறைக்கு RSS கும்பல் IT துறையில் வேறு நேரடியாக நுழைந்துவிட்டது.

இப்படி ஒரு அதி பயங்கரவாத கும்பாலா இருந்தாக் கூட இவனுக்கு இந்த அரசு எல்லா பாதுகாப்பும் வழங்கும். ஏன்னா இந்த அரசே ஒரு பார்ப்பனிய அரசுதான். இது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்க சில பார்ப்பன எதிர்ப்பாளர்கள். அவிங்கள் நினைச்சாதான் பாவமா இருக்கு.

பார்ப்பினியம் தெளிவாக உள்ளது, இந்த அரசாங்க அமைப்பை நம்பி தனது செய்ல்பாடுகள் இல்லை என்பதில். மாறாக இந்த அரசின் இயல்பில்தான் தனது பலத்திற்க்கான ஊற்று மூலம் உள்ளது என்பது அதற்க்கு தெளிவாக தெரிந்த காரணத்தினால்தான் அரசாங்கம் அமைக்கும் விசயத்தில் ஏற்ப்படும் பின்னடைவுகளை அது பொருட்படுத்துவதில்லை.

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் இந்தியாவில் பார்ப்னியத்தை வீதிகளில் சந்தித்து அடிக்காத வரை பார்ப்பனியத்துக்கு கவலையில்ல.

Indian Express News

செய்திரசம்

Related Articles:

“குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்”

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …

பில்கிஸ் தீர்ப்பு – சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…

Posted in தமிழ் | Tagged: , , , | 2 Comments »

எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை!! – அந்த RSS ITயில் நுழையுறான் எச்சரிக்கை!

Posted by newscap on January 29, 2008

ங்க தொட்டு இங்க தொட்டு கடசீல RSS கும்பல் நேரடியா IT துறையில நுழைய ஆரம்பிச்சுட்டாங்க. அப்படின்னா இதுக்கு முன்ன அங்க இவிங்க கிடையாதான்னு கேக்கக் கூடாது. இதுக்கு முன்ன மட்டுமில்ல எப்பயுமே நல்ல பசையுள்ள இடத்துல எல்லாம் பாப்பான் உக்காந்துக்கிட்டு பார்ப்பனியத்த பரப்புற வேலைய செஞ்சிக்கிட்டேதான் இருந்தான். முக்கியமா RSSனிடைய விசமப் பிரச்சாரங்கள் பல இமெயில்களில் காணக் கிடைக்கும். ஆயிரம் ரவுண்டு வந்த தாஜ்மஹால் ஒரு இந்து கோயில் என்ற புரளியாகட்டும். என்னுறு ரவுண்டு வந்த சேது பால புரளியாகட்டும், ஐநூறு ரவுண்டு வந்த மெக்காலே 1835ல் பிரிட்டிஸ் பாராளுமன்றத்திற்க்கு அனுப்பிய செய்தி என்ற புரளியாகட்டும். சில நூறு ரவுண்டு வந்த கார்க்கில் யுத்தத்தில் செத்த ராணுவவீரர்கள், காங்கிரஸ் பேமிலி கிளை வரைபடம் என்ற பார்ப்பன குத்ரக்க கடிததங்களாகட்டும், இவையெல்லாமே IT துறையில் இருக்கும் யுப்பி வர்க்க பார்ப்பனியவாதிகளால் வெகுவாக ரசித்து பெரு வரவேற்ப்பை பெற்றவையே. இது தவிர்த்து இடஓதுக்கிட்டை எதிர்த்து IT யுப்பிகள் நடத்திய போராட்டங்களின் பின்னே இருந்ததும் பார்ப்ப்னிய யுப்பி வர்க்கம்தான். இந்த விசயங்களை அமைப்பு வடிவமாக்கி இன்னும் சூதானமாக நச்சை பரப்பும் வேலையில் பொதுக்கருத்தை உருவாக்கும் வேலையில் RSS தேச துரோக கும்பல் ஈடுபடத் துவங்கியிருக்கிறார்கள் என்பதுதான் புதிய செய்தி. வாசித்து பாருங்கள்.

Source: TOI

செய்திரசம்

‘Software shakhas’ draw IT pros to RSS
28 Jan 2008, 0214 hrs IST, Gautam Siddharth, TNN
 

The Rashtriya Swayamsevak Sangh is adding colour to India’s booming IT sector: saffron.

Efforts to induct young, upwardly mobile IT professionals into its fold have gained momentum in “cybercities” across the country: from Pune to Hyderabad, and from Chennai to Noida.

RSS is drawing young professionals in substantial numbers in these cities to events called “IT Milans” with the ultimate aim of using the networking skills of the young to spread its message.

These “software shakhas” contain everything — from power-point presentations on RSS’s community work to yoga. In fact, video conferences will soon be added to this list.

IT professionals gather once a week in these cities and their numbers are rising.

“The first software shakha was held in Bangalore in 2003-04. It’s a new experiment to connect with emerging sections of professionals,” says Ram Madhav, former RSS spokesman.

“At the Pune IT Milan, more than 1,000 turned up, which isn’t a bad number.”

“The number of youths joining IT companies is increasing. We’ve introduced IT Milan to groom professionals towards RSS’s way of thinking,” says Pune-based Katcheshwar Sahane, western Maharashtra prant sanghachalak of RSS.

Posted in தமிழ் | Tagged: , , | 1 Comment »

கோவில்பட்டியில் பீறிட்டோடும் பார்ப்பன இன வெறி!!

Posted by newscap on January 28, 2008

பார்ப்பன இன வெறி தட்டி போர்டு

மிழ்நாட்டின் மொழியாம் தமிழ்மொழியில் வழிபடு என்று சொன்னால் அது மொழி வெறியாம் ஏனெனில் தமிழ் நம்முடைய மொழியாம் ஆனால் சமஸ்கிருதம் எல்லா நாட்டவர்களுக்கும், உலகத்தவர்களுக்கும், இனத்தவர்களுக்கும் உரிய பொதுவான மொழியாம் அந்த வகையில் அது உயர்ந்ததாம்.கடவுளின் மொழி சமஸ்கிருதம் உலகம் முழுவதற்க்கும் புரிந்த மொழி அதுதான் எனவே அந்த மொழியில் கடவுளிடம் பேசு என்று மொழி வெறியில் அல்ல பார்ப்பன பண்பாட்டு வெறியில் ஒரு தட்டி போர்டு எழுதி அதை தைரியமாக பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர் கோவில்பட்டியில். எனது மொழி என்பது வெறும் எனது மொழி மட்டும்தானாம் அதில் அதற்க்கு மேல் ஒன்றும் கிடையாதாம். மாறாக சம்ஸ்கிருதம்தான் அதி சிறந்ததாம். ஏன் இந்த தட்டி போர்டையே சம்ஸ்கிருதத்தில் எழுதி வைத்திருக்கலாமே?

யாருமே பேசாத மொழியாம் சம்ஸ்கிருதத்தில் வழிபடு என்று தைரியமாக சொல்வதோடல்லாமல் தமிழில் வழிபடு என்று சொல்வது இனதுவேசத்தால் என்கிறார்கள்? அதாவது எனது மொழியில் எனது கடவுளை கும்பிடுவேன் என்று விரும்புவது சம்ஸ்கிருத இனத்தின் மீதான துவேசத்தாலாம். அதாவது எனது மொழியை நான் விரும்பக் கூடாதாம். இனத் துவேசம் என்றால் எந்த இனத்தின் மீதான துவேசத்தால்? அப்படியானால் சம்ஸ்கிருதத்திற்க்கு என்று இனம் உள்ளதா? அப்படியானல் அந்த தட்டி போர்டே சொல்வது போல அது எல்லா இனத்திற்க்குமான மொழியில்லையா? யாருமே பேசாத மொழி எந்த இனத்திற்க்குரியாதாக இருக்க முடியும். பித்தலாட்டக்கார பார்ப்பன பண்பாட்டு வெறியர்களுக்கும் இவையெல்லாம் தெரியாமலில்லை. பார்ப்பன பண்பாட்டு அடிமைகளுக்கோ இவற்றை பகுத்தாராயும் மனிதனுக்குரிய அறிவு இல்லை.

எனது கடவுளை எனக்கு தெரிந்த மொழியில் வழிபடுவது எனது உரிமை என்று கோரினால் அவ்வாறு கேட்பவர்கள் கடவுள் பக்தியில்லாத அரசியல் பிழைப்புவாதிகளாம். சிதம்பரத்தில் தமிழில் வழிபடும் உரிமை கோரி போராடும் ஆறுமுகச்சாமி என்னும் சிவனடியாரும் இவர்கள் கணக்கில் கடவுள் பக்தியில்லாதவர். உண்மையில் அவரை அப்படித்தான் நடத்தினார்கள் தில்லைவாழ் தீட்சிதர்களும், அவர்களின் அல்லக்கையான நீதிமன்றமும். அதாவது பார்ப்பனியத்தின் பண்பாட்டு மேன்மையை ஏற்றுக் கொள்ளாத யாரும் இவர்கள் கணக்கில் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள்தான். அதாவது பார்ப்பான்தான் கடவுள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் இந்த வெறியர்கள்.

தமிழ் வழிபடுவதற்க்கான மொழியில்லை என்று வரலாற்றை திரித்துக் கூறும் இந்த பார்ப்பனியர்கள் இதன் மூலம் தமிழ் நீச மொழி என்பதை வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள். தமிழ் வழிபாட்டு மொழி என்ற வரலாற்றிற்க்கும் கூட தில்லையே ஆதரமாக இருக்கிறது. சிவாலயங்கள் அங்கு வழிபடும் சைவர்களுக்கு மட்டுமே உரியது என்று கூறும் இவர்கள் சைவர்கள் என்று யாரைச் சொல்வார்கள் எனில் பார்ப்பனியத்தை சுவீகரித்துக் கொண்டவர்களைத்தான். ஏனேனில் பார்ப்பனியத்தை எதிர்த்து நிற்க்கும் ஆறுமுகச்சாமி என்ற சிவனடியாருக்கு இவர்கள் குரல் கொடுப்பதில்லை.

சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்குமான சநாதன தர்மம் என்று வெளிப்படையாக பார்ப்பனியத்தை பேசுகிறது இந்த தட்டி போர்டு.

மானங்கெட்ட இந்த தட்டி போர்டு ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும், அவர்களின் மொழியையும், பண்பாட்டையும் அவமானப்படுத்தும் வகையில் பொதுச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதை தட்டிக் கேட்பதுடன் அல்லாமல் பார்ப்பன் பண்பாட்டு வெறியர்களையும், அவர்களின் அல்லக்கை அடிமைகளையும் நடு ரோட்டில் வைத்து நையப் புடைக்க வகையின்றி தமிழ் சமுதாயம் இருப்பது ஆக அவமானகரமானது.

இமெயிலில் செய்தி: குருசாமி, கோவில்பட்டி.

செய்திரசம்.

தட்டி போர்டில் உள்ளது:

சைவப்பெரியோர்களே!

சமீப காலமாக தெய்வ நம்பிக்கை சிறிதும் இல்லாத நாத்திகர்கள் சிலர், தமிழ் வேதம் என்ற போர்வையில், சைவ சமயத்துள்ளும், சிவாலயங்களில் செய்யப்பட்டுவரும் ஆகம வழிபாட்டு முறைகளிலும், பல குழப்பங்களைச் செய்து வருகிறார்கள். நம்முடைய சைவ மடாதிபதிகளை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்தியும் வருகிறார்கள். இவர்கள் கூற்று, தமிழ் மொழியால் மட்டுமே அர்ச்சனை, மற்றும் நித்திய நைமித்திக பூஜைகள், கும்பாபிஷேகங்கள் செய்யப்பட வேண்டும் என்பது. இவர்கள் கூற்று சைவ சமயப்பற்றினாலோ, தமிழ் மொழிப்பற்றினாலோ எழுந்தது அல்ல. சம்ஸ்கிருத மொழி துவேசத்தாலும், இன துவேசத்தாலும் எழுந்தது. தமிழ் மந்திரங்கள் தமிழ் அர்ச்சனை என்பது ஒரு மாயை.

சிவாலயங்கள் அங்கு வழிபாடு செய்யும் சைவர்களுக்கு மட்டுமே உரிமையுடையது. அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு தெய்வ நம்பிக்கையே இல்லாத இவர்கள் யார்? அவர்கள் நோக்கமெல்லாம் இது போன்ற குழப்பங்களைச் செய்து, மொழி வெறியைத் தூண்டி, சுய விளம்பரமும், அரசியல் ஆதாயமும் தேடுவது தான். இவர்களிடம் சைவ மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களின் சாதுர்யப் பேச்சுக்களை உதாசீனம் செய்யுங்கள்.

சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்கும் உரிய பொதுவான சநாதன தர்மம், அதைத் தோற்றுவித்தவரும், வேத ஆகமங்களை அருளிச் செய்தவரும், அனாதி மூத்த சித்துரு ஆகிய சிவபெருமானாரே.

சைவம் நம்முடைய சமயம், தமிழ் நம்முடைய மொழி, சமஷ்கிருதம் எல்லா நாட்டவர்களுக்கும், எல்லா உலகத்தவர்களுக்கும், எல்லா இனத்தவர்களுக்கும் உரிய பொதுமொழி, மொழி வெறியைத் தூண்டி நம்முடய சமயத்தை அழிக்க முயலும் வேடதாரிகளை ஒதுக்கித் தள்ளுங்கள்.

இது பற்றிய விரிவான உண்மைகளை அடியோங்கள் 14-4-1998ல் வெளியிட்ட “சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்! ஏன்?” என்ற வெளியீட்டில் கண்டு தெளிக.

இப்படிக்கு
திருமறை மன்றம், கோவில்பட்டி
ஸ்ரீ அப்பரடிகள் சிவாலய உழவரப்பணித் திருக்கூட்டம், கோவில்பட்டி
ஸ்ரீ மாணிக்கவாசகர் சைவ சபை, கோவில்பட்டி

Posted in தமிழ் | Tagged: , , , , | 18 Comments »

IBM-ல் fresherஆக எடுக்கப்பட்டவர்கள் லே-ஆஃப் துவங்கி விட்டது!!

Posted by newscap on January 24, 2008

IBM முதலான பன்னாட்டு கம்பேனிகள் இந்தியா முதலான மூன்றாம் உலக நாடுகளில் தொழில் துவங்குவதற்க்கு profit center/Cost center என்ற முறையை பயன்படுத்தி வருகின்றன. அதாவது IBM இந்தியா கம்பேனி என்பது Pvt Ltd ஆக தனி கம்பேனியாக இருக்கும். அது IBM USAவிடமிருந்து புரோஜெக்ட்களை அவுட்சோர்சிங் முறையில் பெருகிறது. அதாவது இந்தியன் IBMன் லாஜிக்கல் கிளையண்ட் IBM USA. இதன் அர்த்தம் என்னவென்றால் இந்தியாவில் இனிமேல் சுரண்டி பெரிதாக எதுவும் தேறாது என்ற நிலை வந்தால் வேறு ஏதாவது நாட்டு IBMக்கு (IBM pakistan Pvt ltd, IBM சிரிலங்கா என்பது போல) தனது பிசினஸை மாற்றிக் கொள்ளுவது வசதி. IBM US அதாவது கார்ப்போரேட் தலைமை லாபம் பெறுவது மட்டும் பாதிக்கவே பாதிக்காது.

தற்போது தனது லாபத்தை உறுதிப்படுத்தும் முகமாக காஸ்ட் கட்டிங் அதாவது செலவீனங்களை குறைக்கும் முயற்சியில் இந்த நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக கடந்த வருட(2007) மத்தியில் தனது கம்பேனியில் வேலை பார்த்த ஒப்பந்த ஊழியர்களை வெளியே அனுப்பியது IBM. அவர்களுக்காவது இரண்டு மூன்று மாதம் நேரம் கொடுத்தது. ஆனால் தற்போது வேலை நீக்கம் செய்யப்படும் Freshersகளை ஒரே நாளில் எழுதி வாங்கிக் கொண்டு வேலை நீக்கம் செய்து வருகிறது IBM.

1990க்குப் பிறகு இந்தியா திறந்து விடப் பட்ட பிறகிலிருந்து இது வரை IT/ITES வேலைகள் 16 லட்சம் மட்டுமே உருவாகியுள்ளது. இதே நேரத்தில் சிறு தொழில் துறை என்பது தனது சொந்த காலில் நின்ற நிலைமை போய் பன்னாட்டு தரகு கம்பேனிகளின் ஒப்பந்தக்கார பட்டறைகளாக இன்று உருமாறியுள்ளன இதனால் வேலை இழப்பு 12 லட்சம். இதே நேரத்தில் ஒவ்வொரு வருடமும் கல்லூரிகளின் இருந்து வெளி வரும் பொறியியல் பட்டாதாரிகள் மட்டும் லட்சக்கணக்கில். இந்த லட்சணத்தில் இந்த பன்னாட்டு தரகு கம்பேனிகளுக்கு 100% வருமான வரிச் சலுகை. இதில் Lay off வேறு.

இதே IBM முதலான கம்பேனிகள் தமது அமெரிக்காவில் தமது கம்பேனியில் வேலை பார்த்தவர்களை கருவேப்பிலை போல வீசிவிட்டு வந்தன என்பதையும், அவர்களுக்கே அதுதான் என்றால் இந்திய ஊழியர்கள் எம்மாத்திரம் என்பதையும் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். இப்படி கேட்க்க நாதியற்ற அனாதை போல IT கம்பேனியில் வேலை பார்ப்பது ஆக அநாகரிகமானது, அவமானகரமானது.

செய்தி ஆதாரம்: இணைய நண்பர்கள்.

செய்திரசம்

Freshers – கல்லூரி முடிந்தவுடன் கம்பேனிகளில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள்.

Related Article:

Worker Union in IBM USA

Jobs Flying from India

The Trick called Data theft

Posted in தமிழ் | Tagged: , , , | Leave a Comment »

மாடுகளை கொன்றதற்கு சஸ்பெண்டு என்றால், மக்களை கொன்றதற்கு என்ன தண்டனை?

Posted by newscap on January 22, 2008

மாடுகளை கொன்றதற்கு சஸ்பெண்டு என்றால், மக்களை கொன்றதற்கு என்ன தண்டனை?

ராமேஸ்வர கோவிவில் 24 மாடுகளை பட்டினி போட்டு கொன்றவர்கள் 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். அப்படியானால் 1.5 லட்சம் விவசாயிகளை கொலை செய்த ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

Posted in தமிழ் | Tagged: , , , | Leave a Comment »

நடுத்தர வர்க்க யுப்பிகளுக்கு ஆப்பு அடித்த ஸ்டாக் மார்க்கெட் – 6 நாளில் $300 bn!!

Posted by newscap on January 21, 2008

ங்கு சந்தை கடந்த ஆண்டு முழுவதும் போலியாக உப்பி பெருக்க வைக்கப்பட்டது. உண்மையான பொருள் உற்பத்திக்கான மூலதனமாக இல்லாமல் வெறும் சூதாட்டத்திற்க்கான மூலதனமாக அன்னிய மூலதனம் இந்திய சந்தைக்குள் வந்து விளையாடியது. இந்த விசயத்தை குறிப்பாக அமெரிக்க வீட்டு கடன் பிரச்சினையைத் தொடர்ந்த உலக நிதி மூலதன பிரச்சினைகளை கணக்கில் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது.

ஆனால் இந்த ஊதிப் பெருக்க வைக்கப் பட்ட பப்பிள் பொருளாதாரம் இதோ கடந்த சில வாரங்களாக உடைந்து கொண்டே வருகிறது. சமீபத்திய பொருளாதார உப்பலைத் தொடர்ந்து அதில் தமது சேமிப்புகளை முதலீடு செய்த நடுத்தர வர்க்க யுப்பிகள் இப்பொழுது அதன் நஸ்டத்தின் பலனை மட்டும் அனுபவிக்க காத்திருக்கிறார்கள். மேலும் விரிவான பங்கு சந்தை சரிவு பற்றிய தகவல்:

Investors lose over $300 bn in six days

செய்திரசம்

Posted in தமிழ் | Tagged: , | Leave a Comment »