19% இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!!
Posted by newscap on February 4, 2008
நன்றி: thatstamil
டெல்லி: பெரும் எண்ணிக்கையிலான நகர் பகுதி இந்தியர்கள் ஒரு நாளைக்கு வெறும் 19 ரூபாயில் தான் வாழ்க்கையை ஒட்டுகின்றனர் என தேசிய அளவிலான ஆய்வு தெரிவிக்கிறது. நகர்ப் பகுதிகளில் இது 12 ரூபாயாக உள்ளது.
கிராமப் பகுதிகளில் 19 சதவீத மக்கள் உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் ஒரு நாளைக்கு வெறும் ரூ. 12 மட்டுமே செலவிடும் பொருளாதார நிலையில் உள்ளனர். நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 22 சதவீதம் பேர் ரூ. 19 மட்டுமே செலவிடும் நிலையில் உள்ளனர்.
தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் (National Sample Survey Organisation) 2005-06ம் ஆண்டு நடத்திய ஆய்வு இந்த விவரங்களைத் தெரிவிக்கிறது.
கிராமப் பகுதிகளில் சராசரி இந்தியர்கள் செலவிடும் ஒவ்வொரு ரூபாயிலும் 53 பைசா உணவுக்கே செல்கிறது. நகர் பகுதிகளில் இது 40 பைசாவாக உள்ளது.
ஒரு பக்கம் பங்குச் சந்தையில் குறியீட்டு எண் பாய்கிறது, சரிகிறது. இன்னொரு பக்கம் இந்தியா 9 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது என்று மத்திய அரசு கோஷம் போடுகிறது. ஆனால், நாட்டில் கிட்டத்தட்ட கால்வாசி மக்கள் ‘அரை டாலர்’ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா ஒளிர்கிறது கோஷம் எங்கேயோ மங்கலாகக் கேட்கிறது..
நன்றி: thatstamil
செய்தி விமர்சனம்
newscap said
Test
இந்தியா வளருது, இந்தியர்கள் தேய்கிறார்கள்!! « Not Just News said
[…] 19% இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெ… […]