தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!
Posted by newscap on February 4, 2008
நன்றி: தினமலர் தென்காசியில் RSS பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள் மக்களை பிளவுபடுத்தி எல்லா அயோக்கியத் தனங்களையும் செய்து வருவது அனைவரும் அறிந்த செய்திதான். சமீபத்தில் நில உரிமை பிரச்சினை என்ற தனிப்பட்ட பிரச்சினையை மத பிரச்சினையாக திசை திருப்பி கலவரம் செய்து சில உயிர்கள் சிவலோக பதவியடைய உதவி செய்தவர்களும் இந்த கும்பல்தான்.
இன்னிலையில் அந்த பகுதியில் தமது செல்வாக்கை மேலும் வளர்த்துக் கொள்ள ஏதுவாக RSS அலுவலகத்தில் தாங்களே குண்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியர் மீது பலி போடும் தனது பாரம்பரிய தந்திரத்தை இங்கும் செய்து அம்பலப்பட்டு போயுள்ளது RSS பார்ப்பன இந்துத்துவ வெறி கும்பல்.
இது போன்ற நடைமுறை இவர்களுக்கு புதிதானதொன்றும் இல்லை. ஏற்கனவே நாண்டடில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து அம்பலப்பட்டு போனவர்கள்தான் இவர்கள். அந்த சம்பவத்தில் இறந்தவன் தவிர்த்து மாட்டிக் கொண்ட வெறியர்கள் முஸ்லீம் மசுதி குண்டு வெடிப்புகள், நாக்பூர் RSS அலுவலக குண்டு வெடிப்புகளில் தொடர்பு கொண்டிருந்தது வெளிவந்தது.
இதே கும்பல் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்து பயிற்சி செய்வதும் இவற்றை தமது ஊர்வலங்களில் உபயோகப்படுத்துவதும் எல்லா பத்திரிகைகளிலும் வந்து அம்பலமானதுதான். குஜராத்தில் ராக்கேட் லாஞ்சர்கள் உபயோகித்தது குறித்து பாஜக கட்சி MLA வே வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
காந்தியை கொன்ற கோட்சே தனது கொள்கையை வெளிப்படையாக அறிவிக்கும் நேர்மையின்றி கோழைத்தனமாக, ஒரு பன்றியைப் போல முஸ்லீமின் பெயரை தனது கையில் பச்சை குத்திக் கொண்டு இந்திய முஸ்லீம்களை கொன்றொழிக்க நினைத்தவனின் வாரிசுகள் வெறு விதமாக செயல்பட்டிருந்தால்தான் ஆச்சரியம்.
குண்டு வைத்தவனின் வாக்குமூலம்:
“இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவு கூடும் என்பதால் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் சஞ்சீவ் குமார்.”
குண்டு வெடித்தவுடன் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைது செய் என்று ஏற்கனவே திட்டமிட்டபடி இந்துத்துவ வெறியுடன் பேசிய RSS குரங்கு படையின் தலைவன்.
“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வழக்கம் போல் அரசு செயல்பட்டு வருவதால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெளிப்படையாக வன்முறை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.
தொடர்ந்து ஹிந்துக்கள் மீதும், ஹிந்து இயக்கத் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தென்காசியில் கடந்த வருடம் ஹிந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியன் அவரது வீட்டு முன்பே படுகொலை செய்யப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து அவரது சகோதரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசித் தாக்கியுள்ளனர். இவைகள் அனைத்திற்கும் ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால் தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தைரியமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் மீது தாக்குதல் தடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமிய பயங்கர வாதிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்திடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.”
இவன் கணக்குபடியே குண்டு வைச்சவனை கைது செஞ்சாச்சி. ஆனா இந்த கும்பல் இப்போ கைது செஞ்சது தப்புன்னு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
செய்திரசம்
Related Articles:
குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்
ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!
Newscap said
http://thatstamil.oneindia.in/news/2008/02/05/tn-3-including-kumar-pandian-brother-arrested.html
தென்காசி குண்டு வெடிப்பில் திடீர் திருப்பம் – 3 பேர் கைது
செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 5, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசியில் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்தில் சமீபத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக தென்காசியில் முன்பு படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியனின் அண்ணன் ரவிப்பாண்டியன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென்காசி குண்டு வீச்சு தொடர்பாக ரவிபாண்டியன், கே.டி.சி.குமார், நாராயண சர்மா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குமார் பாண்டியன் குடும்பத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அப்படியும் அக்குடும்பத்துக்கு இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவு கூடும் என்பதால் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் சஞ்சீவ் குமார்.
குமார் பாண்டியனின் அண்ணனே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசிய சம்பவம் தென்காசியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குண்டு வெடிப்பு சதி ஒரு பொய்யான நாடகம் - இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி!!! « Not Just News said
[…] துவங்கி விட்டது!!2 terror suspects arrested in Hubli!!தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த…CPM government has shot killed five Forward Bloc party persons over Anti SEZ […]
பங்கு சந்தைக்கு ஆப்படித்தது யார் என்று கண்டுபிடித்துவிட்டார்கள் - பாசக துப்பியெறியும் படை!!! &laq said
[…] Posts தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த…IBM fires Freshers!!!கோவை குண்டு வெடிப்பு சதி ஒரு […]