Not Just News

Not just another Newsletter

சூளைமேட்டில் மக்களை சுட்டுக் கொன்றவருக்கு டெல்லியில் பாராட்டு பத்திரம்!!!

Posted by newscap on February 4, 2008

நீதிமன்றத்தால் தேடப்படும் கொலைகாரனுடன் பிரதமர் முதல் அத்தனை அரசுத்துறை அதிகாரிகளூம் உட்கார்ந்து பேசி வரவேற்க முடியுமா? இந்திய நாடாளுமன்றம் முதல் அனைத்து துறைகளிலும் பொறுக்கிகளும், ஒன்னாம் நம்பர் கிரிம்னல்களுமே இருக்கும் போது அவர்கள் கொலைகார மொள்ளமாறிகளுடன் பேசாமல் இருந்தால்தானே ஆச்சர்யம். டக்ளஸ் தேவானந்தா என்ற கொலைகாரன் 2006-ல் இந்தியா வந்து பிரதமர் முதல் அத்தனை அரசு துறை அதிகாரிகளையும் சந்தித்து இலங்கை பிரச்சினைக்காக பேசிச் சென்றுள்ளான். இவன் அப்போது இன வெறி பிடித்த சிரிலங்கா அரசில் ஒரு அமைச்சன். இந்த விசயம் எப்போது வேண்டுமானாலும் பேசத் தகுதியானதுதான் ஆனால் செய்தி விமர்சன தளத்தில் பேச வேண்டிய தேவை ஏற்ப்பட்டது ஏன்?

இன்று காலை சென்னையில் ஒரு நண்பர் நடந்து சென்ற பொழுது இந்த டக்ளச அண்ணனை பாராட்டி, சிராட்டி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. பல பல வென்று நன்கு செலவு செய்து அடிக்கப்பட்டிருந்த இந்த சுவரொட்டியில் ஈழ-இந்திய நட்புறவு செழிக்க உழைக்கும் ட்களஸுக்கு நன்றி தெரிவித்து “ராசிவ்காந்தி நினைவெழுச்சி இயக்கம்” என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த நண்பர் இந்த செய்தியை உடனே இமெயில் அனுப்பி மேலதிக தகவல்களும் தந்துள்ளார்.

இந்த டக்ளஸ் ஒரு அரசியல் அனாதை என்பதிருக்க இந்த ஒட்டாண்டிக்கு ஆதரவளிப்பது இந்திய சிங்கள அரசுகளும், உளவு நிறுவனங்களும்தான். இவனது வரலாற்றை சுருக்கமாக பார்த்து விட்டு பிறகு இந்த வால்போஸ்டர் அரசியலை பார்க்கலாம்.

1986-ல் சென்னை சூளைமேட்டில் EPRLF காமெண்டராக இருந்தார். ஒரு இரவு நேர உபா பார்டியில் உச்சஸ்தாயியில் இவர்கள் போட்ட ஆட்டத்தை பொறுக்க மாட்டாமல் சூளைமேடு பொதுமக்கள் எதிர்த்துள்ளனர். உபாவில் இருந்த இந்த கிரிமினல் உடனே தன்னிடம் இருந்த AK47(உபயம்: இந்திய உளவு துறை RAW) துப்பாக்கியால் சுட்டதில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் கொல்லப்பட்டார். கைது செய்து சிறையில் வைக்கப்பட்டவர் தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கம்பி எண்ணிக் கொண்டிருந்தவர் பெயில் வந்தார். வந்தவரை இந்திய உளவுத் துறை RAW பாதுகாப்பாக லங்கா(போஸ்டரில் உள்ளபடி எனில் ஈழத்தில் :-)) இறக்கிவிட்டது.

அன்றிலிருந்து அவரது விசுவாசம் ஒரு நாயின் விசுவாசம் போல இன்றும் தொடருகிறது. இந்த துரோகி இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் ஒரு கிரிமினல் தேச விரோத குற்றவாளி எனும் போதும் அவன் ஒரு ஆட்காட்டி என்ற காரணத்தினால் இந்திய அரசு துறையின் உச்சபட்ச ஆட்களை சந்திக்க இயலுகிறது.

நிற்க, இப்பொழுது சுவரொட்டிக்கு வருவோம். சமீபத்தில் LTTE ஆதரவாக பேசுபவர்களுக்கு எதிரான ஒரு போக்கை அரசு மேற்கொள்வதற்க்கான வாய்ப்புகள் அதிகமுள்ள சூழலை கணக்கில் கொண்டே இந்த சுவரொட்டியை பார்க்க வேண்டியுள்ளது. இந்த சுவரொட்டி RAW உளவுத் துறை கும்பலால் ஒட்ட்ப்பட்டிருப்பதற்க்கான வாய்ப்புகளே அதிகமுள்ளது. ஏன் என்றூ கேட்க அரசு இயந்திரத்தை தவிர்த்து வேறு எங்கும் ஒரு சொறிநாய் கூட இல்லாத ஒருவனுக்கு கலர் கலராக பலபலவென சுவரொட்டி மிளிர்கிறது என்றால் அதன் பின்னணீயை நாம் இப்படித்தான் சந்தேகிக்க வேண்டியுள்ளது. RAWவுக்கு இதெல்லாம் ஒன்றும் புதிய விசயமில்லை. நக்சல்பாரி புரட்சியாளர்கள் குறித்த பய பீதியை கிளப்புவதற்க்காக இவர்களே சுவரொட்டிகளை கைகளால் (ஒரிஜினல் எபெக்ட்) எழுதி ML என்று ஏதாவது ஒரு அமைப்பின் பெயரில் ஒட்டி அதன் பேரில் தமது போலி என்கவுண்டர்களையும், கைதுகளையும் செய்வது சகஜமே.

இந்த வால்போஸ்டர் ஒட்டப்படுவதற்க்கு முன்பாக சிங்கள் இன வெறி அரசின் அல்லக்கை ஏஜெண்டு ‘தி ஹிந்து’ பத்திரிகை என். ராம் கலைஞரை சந்தித்து பேசியுள்ளது இங்கு ஒப்பிட்டு பரிசீலிக்கத்தக்கது.

நன்றி: இமெயில் சுந்தரம்

செய்தி விமர்சனம்

Related:

கொலைகார டக்ளஸ் தேவானந்தாவை இந்தியாவில் அனுமதிக்க கூடாது

India should not to make the mistake of riding on clay horses!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s