Not Just News

Not just another Newsletter

Archive for February 4th, 2008

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

Posted by newscap on February 4, 2008

Photobucket

Photobucket

நன்றி: தினமலர் தென்காசியில் RSS பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள் மக்களை பிளவுபடுத்தி எல்லா அயோக்கியத் தனங்களையும் செய்து வருவது அனைவரும் அறிந்த செய்திதான். சமீபத்தில் நில உரிமை பிரச்சினை என்ற தனிப்பட்ட பிரச்சினையை மத பிரச்சினையாக திசை திருப்பி கலவரம் செய்து சில உயிர்கள் சிவலோக பதவியடைய உதவி செய்தவர்களும் இந்த கும்பல்தான்.

இன்னிலையில் அந்த பகுதியில் தமது செல்வாக்கை மேலும் வளர்த்துக் கொள்ள ஏதுவாக RSS அலுவலகத்தில் தாங்களே குண்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியர் மீது பலி போடும் தனது பாரம்பரிய தந்திரத்தை இங்கும் செய்து அம்பலப்பட்டு போயுள்ளது RSS பார்ப்பன இந்துத்துவ வெறி கும்பல்.

இது போன்ற நடைமுறை இவர்களுக்கு புதிதானதொன்றும் இல்லை. ஏற்கனவே நாண்டடில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து அம்பலப்பட்டு போனவர்கள்தான் இவர்கள். அந்த சம்பவத்தில் இறந்தவன் தவிர்த்து மாட்டிக் கொண்ட வெறியர்கள் முஸ்லீம் மசுதி குண்டு வெடிப்புகள், நாக்பூர் RSS அலுவலக குண்டு வெடிப்புகளில் தொடர்பு கொண்டிருந்தது வெளிவந்தது.

இதே கும்பல் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்து பயிற்சி செய்வதும் இவற்றை தமது ஊர்வலங்களில் உபயோகப்படுத்துவதும் எல்லா பத்திரிகைகளிலும் வந்து அம்பலமானதுதான். குஜராத்தில் ராக்கேட் லாஞ்சர்கள் உபயோகித்தது குறித்து பாஜக கட்சி MLA வே வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

காந்தியை கொன்ற கோட்சே தனது கொள்கையை வெளிப்படையாக அறிவிக்கும் நேர்மையின்றி கோழைத்தனமாக, ஒரு பன்றியைப் போல முஸ்லீமின் பெயரை தனது கையில் பச்சை குத்திக் கொண்டு இந்திய முஸ்லீம்களை கொன்றொழிக்க நினைத்தவனின் வாரிசுகள் வெறு விதமாக செயல்பட்டிருந்தால்தான் ஆச்சரியம்.

Photobucket

Photobucket

Photobucket

 குண்டு வைத்தவனின் வாக்குமூலம்:

இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவு கூடும் என்பதால் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் சஞ்சீவ் குமார்.” 

குண்டு வெடித்தவுடன் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைது செய் என்று ஏற்கனவே திட்டமிட்டபடி இந்துத்துவ வெறியுடன் பேசிய RSS குரங்கு படையின் தலைவன்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வழக்கம் போல் அரசு செயல்பட்டு வருவதால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெளிப்படையாக வன்முறை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.

தொடர்ந்து ஹிந்துக்கள் மீதும், ஹிந்து இயக்கத் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தென்காசியில் கடந்த வருடம் ஹிந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியன் அவரது வீட்டு முன்பே படுகொலை செய்யப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து அவரது சகோதரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசித் தாக்கியுள்ளனர். இவைகள் அனைத்திற்கும் ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால் தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தைரியமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் மீது தாக்குதல் தடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமிய பயங்கர வாதிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்திடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இவன் கணக்குபடியே குண்டு வைச்சவனை கைது செஞ்சாச்சி. ஆனா இந்த கும்பல் இப்போ கைது செஞ்சது தப்புன்னு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

செய்திரசம்

Related Articles:

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …

பில்கிஸ் தீர்ப்பு – சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…

Posted in தமிழ் | Tagged: , , , , | 3 Comments »

19% இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!!

Posted by newscap on February 4, 2008

நன்றி: thatstamil

டெல்லி: பெரும் எண்ணிக்கையிலான நகர் பகுதி இந்தியர்கள் ஒரு நாளைக்கு வெறும் 19 ரூபாயில் தான் வாழ்க்கையை ஒட்டுகின்றனர் என தேசிய அளவிலான ஆய்வு தெரிவிக்கிறது. நகர்ப் பகுதிகளில் இது 12 ரூபாயாக உள்ளது.

கிராமப் பகுதிகளில் 19 சதவீத மக்கள் உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் ஒரு நாளைக்கு வெறும் ரூ. 12 மட்டுமே செலவிடும் பொருளாதார நிலையில் உள்ளனர். நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 22 சதவீதம் பேர் ரூ. 19 மட்டுமே செலவிடும் நிலையில் உள்ளனர்.

தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் (National Sample Survey Organisation) 2005-06ம் ஆண்டு நடத்திய ஆய்வு இந்த விவரங்களைத் தெரிவிக்கிறது.

கிராமப் பகுதிகளில் சராசரி இந்தியர்கள் செலவிடும் ஒவ்வொரு ரூபாயிலும் 53 பைசா உணவுக்கே செல்கிறது. நகர் பகுதிகளில் இது 40 பைசாவாக உள்ளது.

ஒரு பக்கம் பங்குச் சந்தையில் குறியீட்டு எண் பாய்கிறது, சரிகிறது. இன்னொரு பக்கம் இந்தியா 9 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது என்று மத்திய அரசு கோஷம் போடுகிறது. ஆனால், நாட்டில் கிட்டத்தட்ட கால்வாசி மக்கள் ‘அரை டாலர்’ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா ஒளிர்கிறது கோஷம் எங்கேயோ மங்கலாகக் கேட்கிறது..

நன்றி: thatstamil

செய்தி விமர்சனம்

Posted in தமிழ் | Tagged: , , , | 2 Comments »

சூளைமேட்டில் மக்களை சுட்டுக் கொன்றவருக்கு டெல்லியில் பாராட்டு பத்திரம்!!!

Posted by newscap on February 4, 2008

நீதிமன்றத்தால் தேடப்படும் கொலைகாரனுடன் பிரதமர் முதல் அத்தனை அரசுத்துறை அதிகாரிகளூம் உட்கார்ந்து பேசி வரவேற்க முடியுமா? இந்திய நாடாளுமன்றம் முதல் அனைத்து துறைகளிலும் பொறுக்கிகளும், ஒன்னாம் நம்பர் கிரிம்னல்களுமே இருக்கும் போது அவர்கள் கொலைகார மொள்ளமாறிகளுடன் பேசாமல் இருந்தால்தானே ஆச்சர்யம். டக்ளஸ் தேவானந்தா என்ற கொலைகாரன் 2006-ல் இந்தியா வந்து பிரதமர் முதல் அத்தனை அரசு துறை அதிகாரிகளையும் சந்தித்து இலங்கை பிரச்சினைக்காக பேசிச் சென்றுள்ளான். இவன் அப்போது இன வெறி பிடித்த சிரிலங்கா அரசில் ஒரு அமைச்சன். இந்த விசயம் எப்போது வேண்டுமானாலும் பேசத் தகுதியானதுதான் ஆனால் செய்தி விமர்சன தளத்தில் பேச வேண்டிய தேவை ஏற்ப்பட்டது ஏன்?

இன்று காலை சென்னையில் ஒரு நண்பர் நடந்து சென்ற பொழுது இந்த டக்ளச அண்ணனை பாராட்டி, சிராட்டி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. பல பல வென்று நன்கு செலவு செய்து அடிக்கப்பட்டிருந்த இந்த சுவரொட்டியில் ஈழ-இந்திய நட்புறவு செழிக்க உழைக்கும் ட்களஸுக்கு நன்றி தெரிவித்து “ராசிவ்காந்தி நினைவெழுச்சி இயக்கம்” என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த நண்பர் இந்த செய்தியை உடனே இமெயில் அனுப்பி மேலதிக தகவல்களும் தந்துள்ளார்.

இந்த டக்ளஸ் ஒரு அரசியல் அனாதை என்பதிருக்க இந்த ஒட்டாண்டிக்கு ஆதரவளிப்பது இந்திய சிங்கள அரசுகளும், உளவு நிறுவனங்களும்தான். இவனது வரலாற்றை சுருக்கமாக பார்த்து விட்டு பிறகு இந்த வால்போஸ்டர் அரசியலை பார்க்கலாம்.

1986-ல் சென்னை சூளைமேட்டில் EPRLF காமெண்டராக இருந்தார். ஒரு இரவு நேர உபா பார்டியில் உச்சஸ்தாயியில் இவர்கள் போட்ட ஆட்டத்தை பொறுக்க மாட்டாமல் சூளைமேடு பொதுமக்கள் எதிர்த்துள்ளனர். உபாவில் இருந்த இந்த கிரிமினல் உடனே தன்னிடம் இருந்த AK47(உபயம்: இந்திய உளவு துறை RAW) துப்பாக்கியால் சுட்டதில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் கொல்லப்பட்டார். கைது செய்து சிறையில் வைக்கப்பட்டவர் தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கம்பி எண்ணிக் கொண்டிருந்தவர் பெயில் வந்தார். வந்தவரை இந்திய உளவுத் துறை RAW பாதுகாப்பாக லங்கா(போஸ்டரில் உள்ளபடி எனில் ஈழத்தில் :-)) இறக்கிவிட்டது.

அன்றிலிருந்து அவரது விசுவாசம் ஒரு நாயின் விசுவாசம் போல இன்றும் தொடருகிறது. இந்த துரோகி இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் ஒரு கிரிமினல் தேச விரோத குற்றவாளி எனும் போதும் அவன் ஒரு ஆட்காட்டி என்ற காரணத்தினால் இந்திய அரசு துறையின் உச்சபட்ச ஆட்களை சந்திக்க இயலுகிறது.

நிற்க, இப்பொழுது சுவரொட்டிக்கு வருவோம். சமீபத்தில் LTTE ஆதரவாக பேசுபவர்களுக்கு எதிரான ஒரு போக்கை அரசு மேற்கொள்வதற்க்கான வாய்ப்புகள் அதிகமுள்ள சூழலை கணக்கில் கொண்டே இந்த சுவரொட்டியை பார்க்க வேண்டியுள்ளது. இந்த சுவரொட்டி RAW உளவுத் துறை கும்பலால் ஒட்ட்ப்பட்டிருப்பதற்க்கான வாய்ப்புகளே அதிகமுள்ளது. ஏன் என்றூ கேட்க அரசு இயந்திரத்தை தவிர்த்து வேறு எங்கும் ஒரு சொறிநாய் கூட இல்லாத ஒருவனுக்கு கலர் கலராக பலபலவென சுவரொட்டி மிளிர்கிறது என்றால் அதன் பின்னணீயை நாம் இப்படித்தான் சந்தேகிக்க வேண்டியுள்ளது. RAWவுக்கு இதெல்லாம் ஒன்றும் புதிய விசயமில்லை. நக்சல்பாரி புரட்சியாளர்கள் குறித்த பய பீதியை கிளப்புவதற்க்காக இவர்களே சுவரொட்டிகளை கைகளால் (ஒரிஜினல் எபெக்ட்) எழுதி ML என்று ஏதாவது ஒரு அமைப்பின் பெயரில் ஒட்டி அதன் பேரில் தமது போலி என்கவுண்டர்களையும், கைதுகளையும் செய்வது சகஜமே.

இந்த வால்போஸ்டர் ஒட்டப்படுவதற்க்கு முன்பாக சிங்கள் இன வெறி அரசின் அல்லக்கை ஏஜெண்டு ‘தி ஹிந்து’ பத்திரிகை என். ராம் கலைஞரை சந்தித்து பேசியுள்ளது இங்கு ஒப்பிட்டு பரிசீலிக்கத்தக்கது.

நன்றி: இமெயில் சுந்தரம்

செய்தி விமர்சனம்

Related:

கொலைகார டக்ளஸ் தேவானந்தாவை இந்தியாவில் அனுமதிக்க கூடாது

India should not to make the mistake of riding on clay horses!

Posted in தமிழ் | Tagged: , , , , | Leave a Comment »