Not Just News

Not just another Newsletter

கோவில்பட்டியில் பீறிட்டோடும் பார்ப்பன இன வெறி!!

Posted by newscap on January 28, 2008

பார்ப்பன இன வெறி தட்டி போர்டு

மிழ்நாட்டின் மொழியாம் தமிழ்மொழியில் வழிபடு என்று சொன்னால் அது மொழி வெறியாம் ஏனெனில் தமிழ் நம்முடைய மொழியாம் ஆனால் சமஸ்கிருதம் எல்லா நாட்டவர்களுக்கும், உலகத்தவர்களுக்கும், இனத்தவர்களுக்கும் உரிய பொதுவான மொழியாம் அந்த வகையில் அது உயர்ந்ததாம்.கடவுளின் மொழி சமஸ்கிருதம் உலகம் முழுவதற்க்கும் புரிந்த மொழி அதுதான் எனவே அந்த மொழியில் கடவுளிடம் பேசு என்று மொழி வெறியில் அல்ல பார்ப்பன பண்பாட்டு வெறியில் ஒரு தட்டி போர்டு எழுதி அதை தைரியமாக பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர் கோவில்பட்டியில். எனது மொழி என்பது வெறும் எனது மொழி மட்டும்தானாம் அதில் அதற்க்கு மேல் ஒன்றும் கிடையாதாம். மாறாக சம்ஸ்கிருதம்தான் அதி சிறந்ததாம். ஏன் இந்த தட்டி போர்டையே சம்ஸ்கிருதத்தில் எழுதி வைத்திருக்கலாமே?

யாருமே பேசாத மொழியாம் சம்ஸ்கிருதத்தில் வழிபடு என்று தைரியமாக சொல்வதோடல்லாமல் தமிழில் வழிபடு என்று சொல்வது இனதுவேசத்தால் என்கிறார்கள்? அதாவது எனது மொழியில் எனது கடவுளை கும்பிடுவேன் என்று விரும்புவது சம்ஸ்கிருத இனத்தின் மீதான துவேசத்தாலாம். அதாவது எனது மொழியை நான் விரும்பக் கூடாதாம். இனத் துவேசம் என்றால் எந்த இனத்தின் மீதான துவேசத்தால்? அப்படியானால் சம்ஸ்கிருதத்திற்க்கு என்று இனம் உள்ளதா? அப்படியானல் அந்த தட்டி போர்டே சொல்வது போல அது எல்லா இனத்திற்க்குமான மொழியில்லையா? யாருமே பேசாத மொழி எந்த இனத்திற்க்குரியாதாக இருக்க முடியும். பித்தலாட்டக்கார பார்ப்பன பண்பாட்டு வெறியர்களுக்கும் இவையெல்லாம் தெரியாமலில்லை. பார்ப்பன பண்பாட்டு அடிமைகளுக்கோ இவற்றை பகுத்தாராயும் மனிதனுக்குரிய அறிவு இல்லை.

எனது கடவுளை எனக்கு தெரிந்த மொழியில் வழிபடுவது எனது உரிமை என்று கோரினால் அவ்வாறு கேட்பவர்கள் கடவுள் பக்தியில்லாத அரசியல் பிழைப்புவாதிகளாம். சிதம்பரத்தில் தமிழில் வழிபடும் உரிமை கோரி போராடும் ஆறுமுகச்சாமி என்னும் சிவனடியாரும் இவர்கள் கணக்கில் கடவுள் பக்தியில்லாதவர். உண்மையில் அவரை அப்படித்தான் நடத்தினார்கள் தில்லைவாழ் தீட்சிதர்களும், அவர்களின் அல்லக்கையான நீதிமன்றமும். அதாவது பார்ப்பனியத்தின் பண்பாட்டு மேன்மையை ஏற்றுக் கொள்ளாத யாரும் இவர்கள் கணக்கில் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள்தான். அதாவது பார்ப்பான்தான் கடவுள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் இந்த வெறியர்கள்.

தமிழ் வழிபடுவதற்க்கான மொழியில்லை என்று வரலாற்றை திரித்துக் கூறும் இந்த பார்ப்பனியர்கள் இதன் மூலம் தமிழ் நீச மொழி என்பதை வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள். தமிழ் வழிபாட்டு மொழி என்ற வரலாற்றிற்க்கும் கூட தில்லையே ஆதரமாக இருக்கிறது. சிவாலயங்கள் அங்கு வழிபடும் சைவர்களுக்கு மட்டுமே உரியது என்று கூறும் இவர்கள் சைவர்கள் என்று யாரைச் சொல்வார்கள் எனில் பார்ப்பனியத்தை சுவீகரித்துக் கொண்டவர்களைத்தான். ஏனேனில் பார்ப்பனியத்தை எதிர்த்து நிற்க்கும் ஆறுமுகச்சாமி என்ற சிவனடியாருக்கு இவர்கள் குரல் கொடுப்பதில்லை.

சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்குமான சநாதன தர்மம் என்று வெளிப்படையாக பார்ப்பனியத்தை பேசுகிறது இந்த தட்டி போர்டு.

மானங்கெட்ட இந்த தட்டி போர்டு ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும், அவர்களின் மொழியையும், பண்பாட்டையும் அவமானப்படுத்தும் வகையில் பொதுச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதை தட்டிக் கேட்பதுடன் அல்லாமல் பார்ப்பன் பண்பாட்டு வெறியர்களையும், அவர்களின் அல்லக்கை அடிமைகளையும் நடு ரோட்டில் வைத்து நையப் புடைக்க வகையின்றி தமிழ் சமுதாயம் இருப்பது ஆக அவமானகரமானது.

இமெயிலில் செய்தி: குருசாமி, கோவில்பட்டி.

செய்திரசம்.

தட்டி போர்டில் உள்ளது:

சைவப்பெரியோர்களே!

சமீப காலமாக தெய்வ நம்பிக்கை சிறிதும் இல்லாத நாத்திகர்கள் சிலர், தமிழ் வேதம் என்ற போர்வையில், சைவ சமயத்துள்ளும், சிவாலயங்களில் செய்யப்பட்டுவரும் ஆகம வழிபாட்டு முறைகளிலும், பல குழப்பங்களைச் செய்து வருகிறார்கள். நம்முடைய சைவ மடாதிபதிகளை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்தியும் வருகிறார்கள். இவர்கள் கூற்று, தமிழ் மொழியால் மட்டுமே அர்ச்சனை, மற்றும் நித்திய நைமித்திக பூஜைகள், கும்பாபிஷேகங்கள் செய்யப்பட வேண்டும் என்பது. இவர்கள் கூற்று சைவ சமயப்பற்றினாலோ, தமிழ் மொழிப்பற்றினாலோ எழுந்தது அல்ல. சம்ஸ்கிருத மொழி துவேசத்தாலும், இன துவேசத்தாலும் எழுந்தது. தமிழ் மந்திரங்கள் தமிழ் அர்ச்சனை என்பது ஒரு மாயை.

சிவாலயங்கள் அங்கு வழிபாடு செய்யும் சைவர்களுக்கு மட்டுமே உரிமையுடையது. அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு தெய்வ நம்பிக்கையே இல்லாத இவர்கள் யார்? அவர்கள் நோக்கமெல்லாம் இது போன்ற குழப்பங்களைச் செய்து, மொழி வெறியைத் தூண்டி, சுய விளம்பரமும், அரசியல் ஆதாயமும் தேடுவது தான். இவர்களிடம் சைவ மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களின் சாதுர்யப் பேச்சுக்களை உதாசீனம் செய்யுங்கள்.

சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்கும் உரிய பொதுவான சநாதன தர்மம், அதைத் தோற்றுவித்தவரும், வேத ஆகமங்களை அருளிச் செய்தவரும், அனாதி மூத்த சித்துரு ஆகிய சிவபெருமானாரே.

சைவம் நம்முடைய சமயம், தமிழ் நம்முடைய மொழி, சமஷ்கிருதம் எல்லா நாட்டவர்களுக்கும், எல்லா உலகத்தவர்களுக்கும், எல்லா இனத்தவர்களுக்கும் உரிய பொதுமொழி, மொழி வெறியைத் தூண்டி நம்முடய சமயத்தை அழிக்க முயலும் வேடதாரிகளை ஒதுக்கித் தள்ளுங்கள்.

இது பற்றிய விரிவான உண்மைகளை அடியோங்கள் 14-4-1998ல் வெளியிட்ட “சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்! ஏன்?” என்ற வெளியீட்டில் கண்டு தெளிக.

இப்படிக்கு
திருமறை மன்றம், கோவில்பட்டி
ஸ்ரீ அப்பரடிகள் சிவாலய உழவரப்பணித் திருக்கூட்டம், கோவில்பட்டி
ஸ்ரீ மாணிக்கவாசகர் சைவ சபை, கோவில்பட்டி

18 Responses to “கோவில்பட்டியில் பீறிட்டோடும் பார்ப்பன இன வெறி!!”

  1. anamikan said

    First of all you should understand that these views are views of some
    among the Shaivaites in Tamil nadu
    and they cannot be taken as views
    of all brahmins.Shivacharys and
    some mutts in Tamilnadu are
    opposed to using texts like Thevaram,
    Thriruvasagam in Kumbabishekam
    and have gone to courts on this.
    The heads of these mutts and their
    followers are not brahmins, but
    ‘upper caste’ Hindus who profess
    faith in Shaivism, and they rever
    both Tamil and Sanskrit. Instead
    of jumping to conclusions and seeing
    this as yet another brahmin conspiracy
    you could have learnt the facts before
    trying to put forth your analysis.
    But can I expect it from a person
    who cannot differentiate M.S.Swaminathan and Swaminathan S.Iyer
    when their names are different.
    Dont make a fool of yourself so often.

  2. Newscap said

    Do you know the meaning of the below My dear Anamikan (nameless creature),
    ///
    பார்ப்பன பண்பாட்டு வெறியர்களுக்கும் இவையெல்லாம் தெரியாமலில்லை. பார்ப்பன பண்பாட்டு அடிமைகளுக்கோ இவற்றை பகுத்தாராயும் மனிதனுக்குரிய அறிவு இல்லை.
    ////

    I am talking about Parpiniyam(Brahmanism), that doesn’t mean I am talking about Brahmans.

    Request u to read our articles that explians the class nature of Brhamnism.

    And as for the Swaminathan stuff is considered, why cann’t you answer my questions raised on that Swaminathan article my dear annony?

    You could only find this reason in that entire reply to hide your inability… I feel pity for you:-)… Truth sucks…. I am sorry dear..

    Newscap

  3. Newscap said

    Nameless Creature,

    Are u supporting this sanskrit fanaticism or not?

    you didn’t tell anything on this and try to highjack the argument to somewhere….

    Newscap

  4. anamikan said

    கோவில்பட்டியில் பீறிட்டோடும் பார்ப்பன இன வெறி!!

    இப்படி ஒரு தலைப்பு, அதில் பார்ப்பன என்ற சொல் சில இடங்களில் அப்புறம்
    நாங்கள் எதிர்ப்பது பார்பனியத்தை என்ற
    பசப்புரை. சிவாலயங்களில் தமிழே கூடாது என்று அவர்கள் கூறவில்லை.
    சிலவற்றிற்கு தமிழ், சிலவற்றிற்கு சம்ஸ்கிருதம் என்கிறார்கள். இது சைவர்களிடையே எழுந்துள்ள பிரச்சினை.
    இதை அவர்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும். மரபினைக் காக்க சிலர் விரும்புவதும், மாற்றங்களை சிலர்
    கொண்டு வர விரும்புவதும் இயல்பே.
    வழிபாடு இரண்டிலும் இருக்கலாம், தமிழில் அர்ச்சனை இருக்கலாம், சிலவற்றில் மரபைக் மாற்ற வேண்டாம்
    என்று கூட அவர்கள் முடிவு செய்யலாம்.
    தமிழில் சைவ மரபு நீண்ட நெடுங்கால
    பாரம்பரியம் உடையது. அதனால் மாற்றங்களை கொண்டுவர சிறிது காலம்
    ஆகலாம். தேவை உரையாடலும்,
    இருதரப்பும் ஒருவரையொருவர் புரிந்து
    கொள்வதும். இந்து மதத்தினை நிராகரிக்கும் நீங்கள் இதில்
    மூக்கை நுழைப்பது குளம்பிய குட்டையில்
    மீன் பிடிக்கவே. சநாதனம் என்பதன் பொருள் தெரியாதவர்களுக்கு தமிழ் வழிபாடு மீது என்ன சிறப்பு அக்கறை.

    மசூதிகளில் தமிழுக்கு என்ன இடமிருக்கிறது. இது குறித்து
    உங்கள் கருத்து என்ன?. அங்கு ஏன்
    தொழுகை தமிழில் இல்லை என்று
    உங்களால் கேட்க முடியுமா?.

    சமஸ்கிருதம் செத்த மொழி என்று நீங்கள் கருதலாம். அதை வெறுக்கலாம். அதே போல் அதைக் கொண்டாட சிலருக்கு உரிமை உள்ளது.நாரயண குரு செய்தது போல் இது எங்கள் சிவன், எங்கள் சைவம் என்று தமிழுக்கு
    முதலிடம் தந்து சம்ஸ்கிருதம் உட்பட
    வெறெதற்கும் இடமில்லை என்று நீங்கள்
    கோயில் கட்டலாம். அதை யாரும் தடுக்க
    முடியாது. சிதம்பரம் கோயிலில் தமிழில்
    பாட தடையில்லையே. ஒரு குறிப்பிட்ட
    இடத்தில் நின்று பாடுவேன் என்பதில்தான்
    சிக்கல். ஏனெனில் அந்த இடத்தில் பொது
    மக்களுக்கு அனுமதி இல்லை.

    உங்களுக்கு இருப்பது தமிழ் ஆர்வம் இல்லை. மாறாக இந்துக்களிடையே
    குழப்பத்தினை ஏற்படுத்தி, பகையை
    வளர்ப்பதுதான். அனைத்து மதங்களிலும் வழிபாட்டுத் தலங்களில் தமிழுக்கே முதலிடம் என்றும், தமிழே வழிபாட்டு
    மொழியாக இருக்க வேண்டும் என்று
    எழுதும் துணிவு உண்டா. தமுமுக
    என்ற அமைப்புடன் மோடியை எதிர்க்க
    கூட்டு சேர்பவர்கள், மசூதிகளில் தமிழுக்கு
    ஏன் இடமில்லை என்ற கேள்வியைக்
    கேட்கட்டுமே?

  5. subbu said

    I like to give a name to this nameless creature ‘Ellam Terincha Ekaambaram’.

    ETE can you explain why we should not pray to god in our own mother tongue?
    Why we need a mama(middle man) for translating my prayers to god?

    I dont know any one who speaks in sanskrit among themselves,
    I am praying in tamil to my local gods like muniyappan and karuppasamy,
    Why we should pray only in sanskrit to Shiva or Vishnu or some other first class Gods?
    Is God an Alien or from my own country?

    We fools are not able to understand the God properly, please help us to understand as you are an ETE.

  6. Newscap said

    Nameless creature,

    As for your question on Islam is considered,

    Point no1: Islam is not a religion that thrived out by exploiting the very mass of this country in the name of Caste. Practicing Islam culture doesn’t mean insulting the very working mass. Whereas the philosophy and culture of Parpaniyam is nothing but insulting the working people, historically as well as in present practices.

    And whatever the present superior status enjoyed by Parpaniyam is the history of destruction and plunder from the other Indian traditions.

    So if I have to awake my people to think about themself and make them aware of their shackles, it should be done thorugh exposing Parpaniya cultural dominance. This newspost one such attempt.

    I have no problem people following Islam as for as it is their private affair.

    But It is the existence of Parpiniyam that is always problem even in some private minds of the people.

    It is parpaniyam that always associated with this countries history of all attack on language and culture of the very working mass. It is not islam(I didn’t deny the atrocities caused in the name of Islam). Actually Indian Islam has inherieted many of the working people culture into it. But not Parpaniyama.

    //மாறாக இந்துக்களிடையே
    குழப்பத்தினை ஏற்படுத்தி, பகையை
    வளர்ப்பதுதான். //

    You mean to say Hidus are not fighting and united and it is me like people dividing Hidus?

    No dude please read the atrocities caused against Dalits everyday. It is no we dividing your hindu. It is Parpaniyam that divides for the sake it’s own survival. If you are so concerened about commotion and divition among hidu socities, please be involved against the fight on caste. This article itself is one such fight.

    Or may be by the term Hidu you mean the Parpana Upper caste/class?

    If that is the case please speak this loudly so that everybody will hear.

    Point No2: Even though this is the case, if anybody willing to fight for the right to prey in their language in Islam, then it deserves consideration.

    //தமுமுக
    என்ற அமைப்புடன் மோடியை எதிர்க்க
    கூட்டு சேர்பவர்கள்,//

    Do you have any proof for this?

    Though your claim is a big lie and PALA protested Modi seperately and ThaMuMuKa Front protested seperately, I would like to tell something here.

    If PALA can join hands with Arumugasamy, A Shivaire devotee, on his fight on Parpaniyam. Why cannot PALA join hands with ThaMuMuKa on the fight against the same parpiniya terrorist – Modi, as for as the demand doens’t have any religious affinity?

    Newscap

  7. Newscap said

    Nameless Creature,

    Do you mean to say the term Parpana is equal to Parpananan?

    parpana is adjective used to attribute the cultural affinitive of Parpiniyam. whereas parpananan is a term used for born parpanan practicing parpana culture and black parpananan is a term used for other caste but practicing parpana culture and advocating it.

    I even used this term to refer those who advocate Parpaniyam – “பார்ப்பனியர்கள்”. Is it not the term ‘பார்ப்பனர்கள்” actualy meant born parpans?

    And even if I use the term Parpanan it is not wrong.

    Why the hell one should identify with his caste? If you have your caste affinity you will get hurt and I am happy about that.

    if u are a commoner u shouldn’t have any basis to bother about the term Parpanan.

    Newscap

  8. Newscap said

    //உங்களுக்கு இருப்பது தமிழ் ஆர்வம் இல்லை.//

    Did I or anybody told like this? It is because we are selfrespectfull, we got angry and showing our diehard identification with our language when it is insulted.

    Please prove that the sentence in the Thatiboard doesn’t insult Tami.

    //அதே போல் அதைக் கொண்டாட சிலருக்கு உரிமை உள்ளது.//

    Do it in your Kanchipuram Mud. Nobody bothers. Don’t do it in a Temple that belongs to the people.

    Or I would advice you to read the history of Parpaniyam in tamilnadu.

    //சநாதனம் என்பதன் பொருள் தெரியாதவர்களுக்கு தமிழ் வழிபாடு மீது என்ன சிறப்பு அக்கறை.//

    I know the meaning. May be you can tell us your version.

    So that we would be able to pull more Parpaniya nails out of it.

    Please help yourself.. 🙂

    Newscap

  9. Newscap said

    ///சிதம்பரம் கோயிலில் தமிழில்
    பாட தடையில்லையே. ஒரு குறிப்பிட்ட
    இடத்தில் நின்று பாடுவேன் என்பதில்தான்
    சிக்கல். ஏனெனில் அந்த இடத்தில் பொது
    மக்களுக்கு அனுமதி இல்லை.///

    Why? When this ritual come in to exisitence? what is the history of Chidamparam Temple?

    This temple is historically known for its atrocities against Working people and on their culture.

    Nandan is burnt alive for trying to prey lord Siva.

    And today it is Armugasamy who was beaten up for singing in Tamil.

    If historicaly the Temple belongs to Dixiters, then why there is not even single Alwar available from Dixiter community?

    This same temple hid the Tamil versus of preying God – Tevaram behind a closed Closet. and the Chidamparam Brahmins denied even Chola emperor to open the door. Finally he has to use some tricks and Muscle power to open the door. Because this action we atlease find some part of Thevaram surviving.

    So twisting history is always Brahmins way to safeguard their supperiority and this atrocity against Tamil is one such attempt.

    Newscap

  10. Newscap said

    //தமிழில் சைவ மரபு நீண்ட நெடுங்கால
    பாரம்பரியம் உடையது. அதனால் மாற்றங்களை கொண்டுவர சிறிது காலம்
    ஆகலாம். தேவை உரையாடலும்,
    இருதரப்பும் ஒருவரையொருவர் புரிந்து
    கொள்வதும்.//

    the way yuo have conversed with Arumugasamy in Chidamparam is well known.

    You never have intention for a Dialogue.

    Your dialogue is always Dandam.

    so we choose to adopt the same 🙂

    Newscap

  11. Newscap said

    //இப்படி ஒரு தலைப்பு, அதில் பார்ப்பன என்ற சொல் சில இடங்களில் அப்புறம்
    நாங்கள் எதிர்ப்பது பார்பனியத்தை என்ற
    பசப்புரை. சிவாலயங்களில் தமிழே கூடாது என்று அவர்கள் கூறவில்லை.
    சிலவற்றிற்கு தமிழ், சிலவற்றிற்கு சம்ஸ்கிருதம் என்கிறார்கள். இது சைவர்களிடையே எழுந்துள்ள பிரச்சினை.
    இதை அவர்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும். மரபினைக் காக்க சிலர் விரும்புவதும், மாற்றங்களை சிலர்
    கொண்டு வர விரும்புவதும் இயல்பே.
    //

    You have written it as if it is your own private affair. By this you deny the thousand year long history of Brahamanic atrocity on this country, culture and on people. and even you ask us to take these things afresh.

    Wherever the culture of Brahmanism exists there exists the history of Atrocity.

    Sorry dude…. One who don’t know his history will never fight for his freedom.

    the Identity of us ley behind the cover Parpaniyam. So this is not your private affair, as in other religion.

    Because basically yours is not at all a Religion.

    Newscap

  12. Newscap said

    http://poar-parai.blogspot.com/2007/05/blog-post_2512.html

    அம்பேத்கர் என்ன சொல்கிறார்?

    என்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும் போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம். தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால், இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம் சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம், உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று சொல்லவில்லை. அந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

    சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிற வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம் பார்க்கிறது.

    (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175)

    நன்றி: கீற்று

  13. anamikan said

    If historicaly the Temple belongs to Dixiters, then why there is not even single Alwar available from Dixiter community?

    உங்களுக்கு சைவதிற்கும், வைணவத்திற்கும் வேறுபாடு கூடத் தெடரியவில்லை. ஆழ்வார்களில்
    எத்தனை பேர் பார்ப்பனர் அல்லர்
    என்பதாவது தெரியுமா.

    இஸ்லாத்தின் பெயரில் ஒடுக்குமுறை
    நடக்கவில்லையா? தலிபன்கள் செய்த
    கொடுமையெல்லாம் இஸ்லாத்தின்
    பெயரில்தானே? ஏன் இப்போது ருஷ்டி
    இந்தியாவிற்கு வரக்கூடாது, தஸ்லீமாவை
    துரத்து என்று குரலெழுப்புவது யாராம்.
    இஸ்லாமியர்களிடையேயும் சாதிப் பிரிவினை உண்டு, நாங்களும் தலித்கள்
    எங்களையும் தலித்களாக அறிவி என்று
    ஒரு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறதே?. சச்சார் கமிஷ்ன் கூட இஸ்லாமியர்கள் மத்தியில்
    பிரிவுகளை இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளதே. தமிழ் நாவல்களில்
    கூட இஸ்லாமஇயர் மத்தியில் உள்ள பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடுகள்
    சாதியைப் போன்றவை என்று காட்டப்படுகிறதே. கீழே உள்ள சுட்டியைக்
    காண்க

    http://nizhalkal.blogspot.com/2007/11/blog-post.html

    Practicing Islam culture doesn’t mean insulting the very working mass.
    இஸ்லாத்திற்கு, மார்சியத்திற்கும் உள்ள
    பகை முரண் குறித்து தெரியாதா?. சோசலிசத்தினை இஸ்லாம் ஏற்கிறதா?
    பெண்கள் உரிமை என்று வரும் போது
    இஸ்லாமிய சமூகமும்,மதமும் எங்கே
    இருக்கின்றன. இஸ்லாமிய சமூகம்
    கொண்டாடும் காலிப்கள்,மன்னராட்சிகளில்
    வர்க்க பேதங்கள் இல்லவே இல்லையா?.
    தலிபன்கள் வீறு கொண்டு எழுந்தது
    சோசலிசத்தை நடைமுறைப் படுத்த
    நினைத்த ஆப்கன் அரசை. ஈரானில்
    ஷா ஆட்சியைவிட்டு ஒடிய பின் ஏற்பட்ட
    புரட்சியில் பல்லாயிரக்கணக்கான கம்யுனிஸ்ட்கள் கொல்லப்பட்டார்கள்,
    யாரால், கோமெனியின் கட்டுப்பாட்டில்
    இருந்த அரசு அமைப்புகளால்.

    I have no problem people following Islam as for as it is their private affair.
    மசூதியில் வழிபாடு, தொழுகை என்பது
    கூட்டு வழிபாடு.

    Even though this is the case, if anybody willing to fight for the right to prey in their language in Islam, then it deserves consideration.
    ரசூல் என்பவர் ஒரு கட்டுரை எழுதினார்,
    ஊர் விலக்கம் செய்துவிட்டார்கள், அவரையும், குடும்பத்தினரையும். முன்பு ஒரு முறை இப்படி செய்தார்கள், பின்பு
    கலிமா ஒதி சேர்த்துக் கொண்டார்கள்.
    தஸ்லிமாவை கொல்லத் துடிக்கும் சமூகத்திடம் தாய் மொழியில் தொழுகை
    என்றால் தலையை சீவுவோம் என்றுதான்
    பதில் வரும்.

    முஸ்லீம்கள் எது தாய் மொழியானாலும்
    அரபி மொழியில் அருளப்பட்ட குரானையே
    மசூதிகளில் ஒதித் தொழுவது மத உரிமை
    என்றால், கோயில்களில் சம்ஸ்கிருதத்திலும், தமிழிலும் வழிபாடு செய்யும் உரிமை இந்துக்களுக்கும் உண்டு.
    இதை ஏற்காமல் வீம்பிற்காக நீங்கள்
    எதை வேண்டுமானாலும் எழுதலாம்.
    தமிழில் வழிபாடு என்பது ஒரளவு நடைமுறையில் உள்ளது. அது முழுமை
    பெற தேவை உரையாடலும், புரிதலும்.
    ஏதோ கோயிலில் மட்டும் தமிழ் இல்லை,
    பிற இடங்களில் எல்லாம் தமிழ்தான்
    இருக்கிறது என்றா இப்போது இருக்கிறது.
    உயர் நீதிமன்றத்தில், உயர்கல்வியில் தமிழுக்கு என்ன இடமிருக்கிறது.பல துறைகளில் தமிழில் முனைவர் பட்ட
    ஆய்வே மேற்கொள்ள முடியாது என்றுதானே இருக்கிறது. உண்மையில்
    முன்னுரிமை பெற வேண்டியது, தமிழில்
    உயர் கல்வி பெறுவதை சாத்தியமாக்குவதுதான். பார்பனியம் என்று திட்டினால் தமிழ் வளராது.

  14. anamikan said

    பார்பனியம் என்று திட்டினால் தமிழ் வளராது
    என்பது

    பார்பனியம் என்று திட்டுவதானால் தமிழ் வளராது
    என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.
    ———————————-
    முஸ்லீம்கள் அரபி மொழியில் தொழுகை
    செய்வதில் எனக்கு பிரச்சினை இல்லை,
    ஏனெனில் அது அவர்களின் மத உரிமை.
    அதற்காக அவர்களுக்கு தமிழ் பற்று இல்லை என்று பொருள் அல்ல.
    அதே உரிமை அனைத்து மதத்திற்கும்
    உண்டு, அதைத்தான் அரசியல் சட்டமும்
    உறுதி செய்கிறது. தமிழ், சம்ஸ்கிருதம்
    இரண்டையும் ஒன்றிற்கு இன்னொன்று எதிரி என்பது தவறு. மனிதர்கள் செய்த
    தவறுகளுக்காக எந்த மொழியையும்
    வெறுக்கத் தேவையில்லை. ஹிட்லர் செய்த கொடுமைகளுக்காக ஜெர்மன் மொழி மனித விரோதம் என்று சொல்வீர்களா?

  15. anamikan said

    The Report also puts on record the little-recognised reality of caste hierarchies that have always existed among subcontinental Muslims. Thus, the Ashrafs, Ajlafs, Arzals respectively correspond to the Hindu Swarns, Other Backward Castes, and Scheduled Castes respectively. Although, untouchability of the kind that afflicts the Hindu social order does not exist among muslims, and although there is no bar to collective prayer in mosques, the reluctance to inter-dine and inter-marry is often only a concealed reality.1
    1. The reality of caste hierarchies within Indian muslims was perhaps first commented on by Ziauddin Berni (14C, Mohammad Tughlak’s court) in his Faatwa-i-Jahandari; See also Ambedkar, Pakistan or the Partition of India, ch. X: “Social Stagnation” and Zarina Bhatty, “Social Stratification Among Muslims in India”, in Caste: Its Twentieth Century Avatar, ed., M.N. Srinivas

    VOL XLV No 01

    Sachar Committee Report on Indian Muslims: Right Wing Lies Exposed
    Tuesday 24 April 2007, by Badri Raina
    http://www.mainstreamweekly.net/article96.html

    பத்ரி ரைனா இடதுசாரி, ஆங்கிலப் பேராசிரியர், இட ஒதுக்கீட்டினை ஆதரிப்பவர், இந்த்துவாவை எதிர்ப்பவர்.
    நீங்கள் வேறு ஏதோ பத்ரியை மனதில்
    நினைத்துக் கொண்டு அவரை திட்டக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இதை எழுதுகிரேன் :).

  16. Newscap said

    சைவம் வைணவம் வேறுபாடு இருக்கட்டும். சிவ வழிபாட்டு தளத்தில் சிதம்பரத்தில் தீக்சிதர்கள் நுழைந்த வரலாறை குறிக்கவே அந்த வரிகள்.

    மதம் எனப்து ஆளும் வர்க்கத்தின் கருவி என்ற ஆன பிறகு இஸ்லாத்தின் பெயரில் ஒடுக்குமுறை இல்லையா என்பது அல்பத்தனமான கேள்வி. இப்படி அல்பத்தனமாக எதாவது வரும் என்று யூகித்துதான் பிராக்கெட்டில் இஸ்லாத்தின் ஒடுக்குமூரைகளை மறுக்கவில்லை என்றே குறிப்பிட்டிருந்தேன்.

    இங்கு இஸ்லாத்தின் ஒடுக்குமூறை குறித்து விவாதம் நடக்கவில்லை. அங்கு ஒடுக்குமுறை நடப்பதை எதிர்க்கக் கூடாது என்றும் நான் கூறவில்லை இன்னும் சொன்னால் எதிர்க்க வேண்டும் என்று முந்தைய பின்னுட்டத்திலேயே குறிப்பிட்டு சொன்ன பிறப்பாடும உங்கள் முதுகில் உள்ள சொறீ சிரங்கை காட்டினால் அடுத்தவன் முதுகை காட்டி நியாயம் பேசும் வழமையை மாற்றிக் கொள்வது போல தெரியவில்லை. இஸ்லாத்தின் எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் நம் குரல் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். தஸ்லீமா நஸ்ரீன் பிரச்சினையிலும் கூட.

    இஸ்லாத்தில் மனுவாதம் இல்லை என்று நான் நம்புவதாக நீங்களே முடிவு செய்து கொண்டால் அது எனது தவறல்ல. இது குறித்து புத்தகமே வந்துள்ளது(இஸ்லாத்தில் மனுவாதம் – புதிய கலாச்சாரம் வெளியீடு). இதனால்தான் இஸ்லாத்தை மதம் என்று சொல்லும் போதே நீங்கள் குறிப்பிடுகின்ற சிலாகிக்கின்ற பார்ப்ப்னியத்தை மதம் என்று நான் சொல்லவில்லை.

    ஏனேனில் பார்ப்னியம் சாதிய அடக்குமுறை தத்துவம். இஸ்லாத்தின் எந்த தத்துவம் சாதியை நியாயப்படுத்துகிறது என்று சொன்னால் இஸ்லாமை நாம் விமர்சனம் செய்ய வசதியாக இருக்கும்.

    இந்தியாவின் ஒடுக்குமுறை நிர்வாகம் சாதிய பார்ப்ப்னியமாக இருக்கின்ற வரை. இஸ்லாம் மட்டுமல்ல வேறு எந்த தத்துவமும் இங்கு சீரழிந்தே போகும். இதன் அடிப்படை புரிந்த இதனை நிராகரிக்கீற தத்துவம் மட்டுமே சரியானதாக செய்லபட முடியும்.

    இஸ்லாத்தின் எந்த தத்துவம் சாதி அடிப்படையில் மக்களுக்கு உரிமை வழங்குகிற்து என்று சொன்னால் நாம் விம்ர்சனம் செய்ய வசதியாக இருக்கும்.

    மாறாக இந்த ஒடுக்குமூறை அடிமைத்தத்த்வமாகிய வர்ணாஸ்ரம தர்மத்தையே தனது ஆன்மாவாக கொண்டுள்ளது பார்ப்ப்னியம். அந்த கொழுப்பிலிருந்துதான் இந்த தமிழ் வரலாற்றை திரித்து சம்ஸ்கிருத்தத்தை ஏதோ உலக மொழி என்று திணிக்கும் பார்ப்ப்னிய திமிர் பிடித்த தட்டிப் பலகை. அதை தட்டி கேட்க்க வக்கற்ற பெயரில்லா பெருந்தகை இங்கு நியாயம் பேசிக் கொண்டிருக்கிறது.

    உங்களிடம் கேட்டிருந்த் கேள்விக்கு பதில் இல்லை திரு பெயரில்லா பெருந்தகையே. அதை விடுத்து விவாததை இஸ்லாமியம் குறித்ததாக கொண்டு செல்வதை அனுமதிக்க முடியாது. சோசலிசம் இஸ்லாத்திற்க்குமுள்ல உறவுக்ள் குறித்து தெரியும் வேண்டுமானல் தனிமடலிடவும் பாடம் நடத்துகிறேன்.

    உங்களுக்கான கேள்வி:
    //
    Please prove that the sentence in the Thatiboard doesnஒt insult Tami.
    //

    ஜெர்மனி ஒரு வழக்கிலுள்ள மொழி, சம்ஸ்கிருதம்? அது வெறுமே பார்ப்பன வெறியின் வரலாற்று அடையாளாம் தவிர்த்து வேறொன்றும் இல்லை. அதை பார்ப்பனர்கள் தூக்கிப் பிடிப்பதில் சூத்திரன் காதில் ஈயத்தை ஊற்று எனும் மனு தர்மாம் பாசம் தவிர்த்து வேறொன்றும் தெரியவில்லை.

  17. Newscap said

    //பத்ரி ரைனா இடதுசாரி, ஆங்கிலப் பேராசிரியர், இட ஒதுக்கீட்டினை ஆதரிப்பவர், இந்த்துவாவை எதிர்ப்பவர்.
    நீங்கள் வேறு ஏதோ பத்ரியை மனதில்
    நினைத்துக் கொண்டு அவரை திட்டக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இதை எழுதுகிரேன் :).//

    முதல்ல என்ன கேட்டுறுக்கோ அதுக்கு பதில் சொல்லுயா…

    அதை விடுத்து எனது கேள்விகள் என்று நான் கேட்க்காத எதையாவது புரிந்து கொண்டு சம்பந்தா சம்பந்தமில்லாமல் லிங்குகள் மேற்கோள்கள் கொடுப்பது ஒரு நல்ல பார்ப்பன யுக்தி என்பதை தவிர்த்து வேறொன்றுமில்லை.

    அசுரன்

  18. Newscap said

    //If historicaly the Temple belongs to Dixiters, then why there is not even single Alwar available from Dixiter community? //

    A correction:

    Instead ‘Alwar’ read ‘Nayanmar’. Nandan is one among the Nayanmars. There is no Dixitars in this 63 Nayanmars.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s